திருநெல்வேலி, கோவில் அருகில் மின் தகன மேடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு!
திருநெல்வேலியில் அமைந்துள்ள களக்காட்டில் கோவில் அருகில் மின் தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
By : Bharathi Latha
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள களக்காடு பகுதியில் தற்போது மின் தகன மேடை அமைக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. ஆனால் அந்த முடிவிற்கு தற்போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். ஏனென்றால் மின் தகன மேடை அமைய உள்ள இடம் தற்போது கோவிலுக்கு அருகில் உள்ளதால் மிக சிரமத்திற்கு உள்ளாகி விடும் என்ற காரணத்தினால் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். மேலும் கோவில் திருவிழாக்களின் போது இது மிகவும் சிரமத்தை ஏற்படுத்தும் முடிவாக அமையும் என்பதையும் கூறி உள்ளார்கள்.
தற்போது தமிழக அரசு எடுத்துள்ள இத்தகைய முடிவை கைவிட வேண்டும் என்றும் இடத்தில் மின் தகன மேடை அமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் தற்போது கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து மேலும் தகவல்களை அரசாங்கம் தான் எடுக்க வேண்டும். தற்போது மின் தகன மேடை அமைப்பதற்கு களக்காடு புது தெரு, கக்கன் நகர் போன்ற ஏரியாக்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். மேலும் நகராட்சி தற்போது தேர்வு செய்துள்ள இடமானது சுவாமி கோயில் மற்றும் கக்கன் நகர் குடியிருப்பு பகுதியில் மிக அருகில் அமைந்துள்ளது.
இந்த வழியாகத்தான் கிராம மக்கள் கோவிலுக்கு சென்று வர வேண்டும் மேலும் அங்கு உளள ஆற்றுக்கு அந்த வழியாகத்தான் மக்கள் சென்று வருகிறார்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த இடம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்ததால் இதுகுறித்து மாற்று யோசனை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கூறப்பட்டுள்ளது இதனை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் உட்பட அதிகாரிகளுக்கு மனு அனுப்ப உள்ளோம் என்றும் கிராம மக்கள் கூறியுள்ளார்கள்.
Input & Image courtesy: Thanthi News