Kathir News
Begin typing your search above and press return to search.

அரிசி கிலோ ரூ.448, பால் லிட்டர் ரூ.263, பெட்ரோல் லிட்டர் ரூ.283: இலங்கை அதிபருக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்!

அரிசி கிலோ ரூ.448, பால் லிட்டர் ரூ.263, பெட்ரோல் லிட்டர் ரூ.283: இலங்கை அதிபருக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்!
X

ThangaveluBy : Thangavelu

  |  17 March 2022 8:16 AM GMT

இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. அன்னிய செலாவணி கையிருப்பு எதுவுமே இல்லை, இதனால் கச்சா எண்ணெய் கூட இறக்குமதி செய்ய முடியாமல் தவித்து வருகிறது. இதனால் மக்கள் போராட்டமாக வெடித்துள்ளது.

மேலும், வெளிநாடுகளில் இருந்து கியாஸ் இறக்குமதி கூட செய்ய முடியாத நிலையில் இலங்கை அரசு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் சமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. மீண்டும் விறகு அடுப்பிற்கு செல்லும் நிலைக்கு இலங்கை சென்றுள்ளது என்றே சொல்லலாம். இலங்கையில் வரலாறு காணாத மின்வெட்டு பிரச்சினை நிலவுகிறது. அங்குள்ள மக்கள் வீதிகளில் அதிபர் பதவி விலக வலியுறுத்தி போராட்ட களத்தில் குதித்துள்ளனர். இதனால் இலங்கை தலைநகர் கொழும்புவில் எங்கு பார்த்தாலும் சாலைகளில் தீ கொளுந்துவிட்டு எரிகிறது.

போர் காலங்களில் கூட இப்படி ஒரு நிலை உண்டானதில்லை, அரிசி கிலோ ரூ.448 ஆக உள்ளது. ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.263 ஆக இருக்கிறது. ஒரு முட்டையின் விலை ரூ.28 ஆக என பல உணவுப்பொருள்களின் விலை பத்து மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மிகப்பெரிய துன்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அதே சமயம் வாகனங்களுக்கான எரிபொருள் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 283 ரூபாயகவும், டீசல் லிட்டர் ரூ.176 ஆக உயர்ந்துள்ளது.

மக்கள் வாகனங்களை பயன்படுத்த முடியாமல் நடந்தும் சைக்கிளிலும் செல்லும் நிலை உருவாகியுள்ளது. இது போன்ற மோசமான பொருளாதா சீரழிவுக்கு ராஜபக்ஷே குடும்பம்தான் காரணம் எனவும், உடனடியாக அதிபர் மற்றும் பிரதமர் தங்களின் பதவிகளை விலக வேண்டும் என்று கொழும்புவில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. எங்கு பார்த்தாலும் தீக்கறையாகவே உள்ளது.

Source: Daily Thanthi

Image Courtesy: First Post

Next Story
கதிர் தொகுப்பு
Trending News