Begin typing your search above and press return to search.
ஐ.நா அமைதிப்படையில் இந்திய ராணுவ வீராங்கனைகள் அதிக அளவில் பங்கேற்பால் பெருமிதம் - பிரதமர் மோடி மகிழ்ச்சி
ஐ. நா அமைதிப்படையில் இந்திய ராணுவ வீராங்கனைகள் அதிக அளவில் பங்கேற்பால் பெருமிதம் . பிரதமர் மோடி மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
By : Karthiga
ஐ.நா அமைதிப்படையில் அதிக அளவிலான இந்திய ராணுவ வீராங்கனைகள் அடங்கிய படைப்பிரிவு தெற்கு சூடான் மற்றும் சூடான் இடையிலான அபேய் எல்லை பகுதியில் நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராணுவம் தனது டுவிட்டர் தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தது.
இதற்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி இந்த நடவடிக்கைக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் 'இதை பார்க்க பெருமையாக உள்ளது. ஐ.நா அமைதி நடவடிக்கைகளில் இந்தியா தீவிரமாக பங்கேற்கும் பாரம்பரியம் உள்ளது . இதில் நமது பெண்கள் சக்தியும் பங்கேற்பது இன்னும் மகிழ்ச்சி அளிக்கிறது ' என குறிப்பிட்டுள்ளார்.
Next Story