Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் பி.டி.உஷா

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் தடகள வீராங்கனை பி.டி.உஷா.

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் பி.டி.உஷா

KarthigaBy : Karthiga

  |  28 Nov 2022 12:30 PM GMT

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் அடுத்த மாதம் 10-ம் தேதி நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு முன்னால் தடகள வீராங்கனை கேரளாவை சேர்ந்த பி.டி உஷா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது. தலைவர் பதவிக்கு அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் 58 வயதான பி.டி உஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதன் மூலம் ஐ. ஓ.ஏ யின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பெறப்போகிறார். 'தங்கமங்கை' என்று அழைக்கப்படும் பி.டி உஷா 1986 ஆம் ஆண்டு சியோலில் நடந்த ஆசிய விளையாட்டில் நான்கு தங்க பதக்கத்தை அறுவடை செய்தவர் ஆவார்.


1984 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் மயிரிழையில் வெண்கல பதக்கத்தை நழுவ விட்டு நான்காவது இடத்தை பெற்றார். மேல்சபை எம்.பி அண்ணா அவர் இப்போது இந்திய விளையாட்டில் செல்வாக்கு மிக்க பதவியை பிடிக்க உள்ளார். துணைத் தலைவர்கள், பொருளாளர், இணை செயலாளர், நிர்வாக கவுன்சில் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐ.ஓ.ஏ யின் மற்ற பதவிகளுக்கு சேர்த்து மொத்தம் 24 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News