சீனாவுக்கு கொ.ப.செ ஆன PTI உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்கிறதா பிரச்சார் பாரதி? பரபரப்பு.! #PressTrustOfIndia #PrasarBharati
சீனாவுக்கு கொ.ப.செ ஆன PTI உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்கிறதா பிரச்சார் பாரதி? பரபரப்பு.! #PressTrustOfIndia #PrasarBharati

சீனத் தூதுவரிடமிருந்து பேட்டி எடுத்து வெளியிடுகிறேன் பேர்வழி என்று சீன அரசுக்கு கொள்கை பரப்பு செயலாளர் போல் செயல்பட்டதாக கடும் கண்டங்களை சந்தித்து வரும் PTI (Press Trust of India) நிறுவனம், மேலும் ஒரு சிக்கலில் சிக்கியுள்ளது. இந்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரச்சார் பாரதி ,PTI யுடனான தனது சந்தா ஒப்பந்தத்தை விரைவில் நிறுத்திக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.
1949ல் நிறுவப்பட்ட PTI இந்தியாவின் மிகப்பெரிய செய்தி ஏஜென்ஸியாகும்.
PTI உடனான நேர்காணலின் போது, தூதர் சன், இந்தியாவால் நிராகரிக்கப்பட்ட சீன கம்யூனிஸ்ட் ஆட்சியின் பிரச்சாரத்தை மீண்டும் வலியுறுத்தினார் .அதாவது கால்வான் பள்ளத்தாக்கு மோதல்களுக்கு இந்தியப் படைகள் பொறுப்பு என்பது. "பொறுப்பு சீனா மீது இல்லை. சீனாவைத் தூண்டுவதற்காக இந்திய தரப்பு LAC (உண்மையான கட்டுப்பாட்டு எல்லை) ஐக் கடந்து சீன எல்லைப் படையினரைத் தாக்கியது. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினைகள் தொடர்பான ஒப்பந்தங்களை இந்தியப் படைகள் கடுமையாக மீறியுள்ளன, "என்று அவர் கூறினார்.
PTI போர்டு மீட்டிங் இன்று (ஜூன் 27), நடைபெறுவதற்கு முன்பு, இப்படித் தொடர்ச்சியாக , நியாயமான பத்திரிகை விதிமுறைகளைப் பின்பற்றாமல் (சமீபத்திய சீன தூதுவர் நேர்காணல் உட்பட) PTI நடந்து வருவதைக் கண்டித்து ஒரு கடிதம் எழுதியுள்ளது பிரச்சார் பாரதி.
PTI நடந்து கொள்ளும் முறைகள், பிரச்சார பாரதி அதனுடனான உறவைத் தொடர்வதற்கு ஏற்றவையாக இல்லை எனத் தெரிவித்துள்ளது.
சந்தா ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, PTI சில தசாப்தங்களாக பிரசார பாரதியிடமிருந்து பல கோடிக்கு பெரும் வருடாந்திர கட்டணங்களைப் பெறுகிறது. 2016-2017 முதல் ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மறுஆய்வு செய்ய PTI பலமுறை மறுத்துவிட்டது
பிரசர் பாரதி PTI உடனான அதன் நீண்டகால உறவை மறுஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இது குறித்த இறுதி முடிவு விரைவில் வரும் என்றும் கூறப்படுகிறது.