Kathir News
Begin typing your search above and press return to search.

நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட தி.மு.க அரசு முன்வருமா? - பொதுமக்கள் கோரிக்கை

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட தி.மு.க அரசு முன்வருமா? - பொதுமக்கள் கோரிக்கை

KarthigaBy : Karthiga

  |  24 Aug 2022 10:15 AM GMT

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் ரயில் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இதனால் நாள்தோறும் பலமுறை ரயில்வே கேட் மூடப்பட்டதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மாற்று வழிகள் தான் என அதற்கான கோரிக்கையை கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அரசுக்கு விதிக்கப்பட்டு வந்தது.


கடந்த கால தி.மு.க காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அப்போதைய மத்திய மந்திரிகள் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் டி .ஆர். பாலு மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ இராசமாணிக்கம் ஆகியோரின் முயற்சியின் பேரில் சுற்றுசாலை அமைக்க முதலில் மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலை துறைக்கு 100 கோடி ஒதுக்கீடு செய்தது. பின்னர் நான்கு வழி சாலை திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்த போது அந்த திட்டத்தில் நீடாமங்கலம் பகுதியும் இணைக்கப்பட்டு சுற்றுலாத் திட்டம் கைவிடப்பட்டது.


நான்கு வழி சாலை திட்டப் பணிகள் தொடங்கி நடந்து வந்ததது.திருச்சி முதல் தஞ்சாவூர் வரையிலான பணிகள் நிறைவடைந்தது.


தஞ்சாவூர் முதல் நாகப்பட்டினம் வரையிலான பணிகளில் ஏதோ காரணத்தால் தேக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்தத் திட்டம் நிதி பற்றாக்குறை காரணமாக இரு வழி சாலை திட்டமாக அறிவிக்கப்பட்டது. அந்த பணியும் முழுவதுமாக நிறைவேற்றப்படாமல் இருந்தது. தற்போது மீண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.


இதற்கிடையே மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பொது மக்களின் நீண்டகால கோரிக்கையான நீடாமங்கலம் ரயில்வே மேம்பால திட்டத்திற்கு முதல்கட்டமாக 20 கோடியை அரசின் 110 ஆவது விதியின் கீழ் அறிவித்தார்.


மண் பரிசோதனை செய்யப்பட்டு நெடுஞ்சாலைத் துறையால் திட்ட வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு ரயில்வே துறை நெடுஞ்சாலைத் துறையால் ஆய்வும் நடத்தப்பட்டது. தொடர்ந்து நீடாமங்கலம் மேம்பாலம் திட்டத்திற்காக 2015-16 ஆம் நிதியாண்டில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து அனுமதியளித்தது.


இந்த நிலையில் கிடப்பில் போடப்பட்ட நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம் திட்ட பணியை தொடங்க பொதுமக்களின் கோரிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார்.அதன்பேரில் அமைச்சர் ஏ.வ.வேலு சட்டமன்றத்தில் மத்திய அரசின் அனுமதி பெற்று மேம்பால பணி தொடங்கப்படும் என தெரிவித்தார்.இதன்மூலம் நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் அமையும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.


அரசு அதிகாரிகள் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் நாள்தோறும் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் போது ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது.இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.


எனவே நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News