திமுக கூட்டணி ஆட்சி செய்யும் புதுச்சேரியில் பால்விலை ரூ.6 உயர்வு! ஸ்டாலின், திருமாவளவன், கே.எஸ் அழகிரி எங்கே?
திமுக கூட்டணி ஆட்சி செய்யும் புதுச்சேரியில் பால்விலை ரூ.6 உயர்வு! ஸ்டாலின், திருமாவளவன், கே.எஸ் அழகிரி எங்கே?
By : Kathir Webdesk
தமிழகத்தில் சமீபத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டது.
நீலம் (நிலைப்படுத்தப்பட்டது) ஒரு லிட்டர் பால் அட்டைக்கு ரூ.40 ஆகவும், சில்லரை விற்பனை ரூ.43 ஆகவும், பச்சை (சமன்படுத்தப்பட்டது) பால் அட்டைக்கு ரூ.45 ஆகவும், சில்லரை விற்பனை ரூ.47 ஆகவும் உயர்ந்து உள்ளது.
ஆரஞ்சு (கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்டது) பால் அட்டைக்கு ரூ.49 ஆகவும், சில்லரை விற்பனை ரூ.51 ஆகவும், மெஜந்தா (கொழுப்பு சத்து நீக்கப்பட்டது) பால் அட்டைக்கு ரூ.41 ஆகவும் உயர்ந்து இருக்கிறது.
இந்த பால் விலை உயர்வுக்கு திமுக தலைவர் கடும் கண்டனம் தெரிவித்தார். அவர், “பால் வார்ப்பதற்கு பதிலாக பொதுமக்களின் வயிற்றில் அடிக்கும் அதிமுக ஆட்சி” என்று குறிப்பிட்டார்.
இதேபோல, காங்கிரஸ், கம்யுனிஸ்டுகள், திருமாவளவன் உள்பட திமுக கூட்டணி கட்சியினர் அனைவரும் பொங்கி எழுந்தனர்.
இந்த நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்யும் புதுச்சேரியிலும் பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது.
சமன்படுத்தபட்ட ஒரு லிட்டர் பால் விலையை ரூ.36-இல் இருந்து ரூ.42 ஆக உயர்த்தியுள்ளது புதுவை காங்கிரஸ் அரசு. சிறப்பு சமன்படுத்தப்பட்ட பால் விலை ஒரு லிட்டர் ரூ.38-இல் இருந்து ரூ.44-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலைப்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் விலை ரூ.42-இல் இருந்து ரூ.48-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பால் விலை உயர்தப்பட்டதற்கு துள்ளி குதித்த திமுக தலைவர் ஸ்டாலின் இப்போது ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளார்.
அதேபோல காங்கிரசின் கே.எஸ்.அழகிரி, திருமாவளவன், கம்யூனிஸ்ட்கள் உள்பட அனைத்து எடுபிடிகளும் இப்போது வாயே திறக்க வில்லை.