Kathir News
Begin typing your search above and press return to search.

பஞ்சாபில் தொடர்ச்சியாக நடைபெறும் இந்துமத நூல்களின் அவமதிப்பு செயல்கள்!

பஞ்சாபில் தொடர்ச்சியான வண்ணம் இந்துமத நூல்களை அவமதிக்கும் விதமாக செயல்கள் நடைபெற்று வருகின்றன.

பஞ்சாபில் தொடர்ச்சியாக நடைபெறும் இந்துமத நூல்களின் அவமதிப்பு செயல்கள்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 Dec 2021 12:45 AM GMT

பஞ்சாப்பில் பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள். இருப்பினும் இந்து மதம் சார்ந்த விஷயங்கள் குறிப்பாக இந்து மதங்களின் புனித நூல்கள் அவமதிக்கப்படும் செயல்கள் தொடர்பிலான வண்ணம் அங்கு அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தற்பொழுது, பஞ்சாபில் உள்ள லூதியானாவில் அருகே உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு கிழிந்த இந்துமத நூல்கள் சிதறிக்கிடந்த உள்ளன.

இந்து மத நூல்களின் துண்டு துண்டான பிரதிகளை சிவசேனா பஞ்சாப் தேசியத் தலைவர் ராஜீவ் டாண்டன் மற்றும் அவருடன் இருந்தவர்கள் காவல்துறையிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அங்கு வந்து இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டு இருப்பவர்கள் யார்? என்பதை போலீசார் தொடர்ச்சியான வண்ணம் தற்பொழுது விசாரித்து வருகிறார்கள்.


சீக்கிய மக்களின் புனித நூல்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் அடிக்கடி இப்படி செயல்படுத்தப்படும் செயல்களில் ஈடுபடவும் இத்தகைய நபர்களை மிகவும் கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று அங்குள்ள மக்களின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீக்கியர்கள் குறிப்பாக அவர்களுடைய புனித நூல்கள் மற்றும் வேதங்களை மிகவும் அவர்கள் புனிதமாக கருதுகிறார்கள். எனவே அவற்றை இப்படி சேதப்படுத்தும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீக்கியர்கள் சார்பாக கூறப்பட்டுள்ளது.


மேலும் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள OPINDIA சிவசேனா பஞ்சாப் தேசியத் தலைவர் ராஜீவ் டாண்டன் இடம் விசாரிக்கையில், அவர் போலீஸ் நிலையம் வெளியில் கிடந்த புத்தகம் குறிப்பாக இந்துக்களின் புனித நூலான ஸ்ரீ கருட புராணம், ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் பிற இந்து மத நூல்களின் கிழிந்த பக்கங்களை மேற்கூறிய இடத்திலிருந்து மீட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Input & Image courtesy: Opindia

Next Story
கதிர் தொகுப்பு
Trending News