'புஷ்பக்' மறு பயன்பாட்டு ராக்கெட் சோதனை வெற்றி!
'புஷ்பக்' மறு பயன்பாட்டு ராக்கெட் சோதனையில் இஸ்ரோ வெற்றியடைந்துள்ளது.
By : Karthiga
கர்நாடக மாநிலம் சித்திர துர்கா மாவட்டத்தில் உள்ள ஏரோநாட்டிக்கல் சோதனை தளத்தில் இருந்து ஏவப்பட்ட புஷ்பக் மறு பயன்பாட்டு ராக்கெட் சோதனை வெற்றிகரமாக நிகழ்ந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மறு பயன்பாட்டு ராக்கெட்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. விண்ணில் செலுத்தக்கூடிய ராக்கெட்டை பூமியில் தரைக்கு மீண்டும் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்ப சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மறு பயன்பாட்டு ராக்கெட்டின் தரையிறங்கும் திறனை நிரூபிப்பதற்காக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கர்நாடக மாநிலம் சித்திர துர்கா மாவட்டத்தில் உள்ள ஏரோநாட்டில் சோதனை தளத்திலிருந்து சோதனை செய்யப்பட்டது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட ஒடுபாதையில் மாதிரி ராக்கெட் வெற்றிகரமாக தரையிறங்கியது .அதன் தொடர்ச்சியாக நேற்று காலையில் அதே சோதனை தளத்திலிருந்து மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் இரண்டாவது கட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டது .இந்த பரிசோதனையின் மூலம் மறு பயன்பாட்டுக்கு செலுத்து வாகன தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய மைல் கல்லை எட்டி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டல் அறிவிப்பில் கூறி இருப்பதாவது :-
'புஷ்பக்' என பெயரிடரிடப்பட்டுள்ள இறக்கையுடன் கூடிய இந்த மாதிரி ராக்கெட் விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டர் மூலம் உயரேக் கொண்டு செல்லப்பட்டு 4.5 km உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது . 4 கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோது தானாக ஓடுபாதையை அணுகிய புஷ்பக் துல்லியமாக ஓடுபாதையில் தரையிறங்கியது. பின்னர் அதன் பிரேக், பாராசூட், லேண்டிங் கியர் ,பிரேக்குகள் மற்றும் முன்பக்க ஸ்டியரிங் வீல் ஆகியவற்றை பயன்படுத்தி ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டது.
விண்வெளியில் இருந்து திரும்பும் மறு பயன்பாட்டு ராக்கெட்டின் அணுகுமுறை மற்றும் தரையிறங்கும் நிலைமைகளை இன்றைய பரிசோதனை தெளிவுபடுத்தி இருக்கிறது என்று இஸ்ரோ கூறியுள்ளது. மிகவும் சவாலான இந்த திட்டத்தை சிறிய குறையும் இல்லாமல் செயல்படுத்திய விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
SOURCE :Dinaboomi