Kathir News
Begin typing your search above and press return to search.

இஸ்ரேல் விவகாரத்தில் உலக அரசியலையே மிரள வைத்த மோடி போட்ட போடு!

மத்திய கிழக்கு நாடுகளையும் இஸ்ரேல் விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள விவகாரம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இஸ்ரேல் விவகாரத்தில் உலக அரசியலையே மிரள  வைத்த மோடி போட்ட போடு!
X

KarthigaBy : Karthiga

  |  15 Oct 2023 8:15 AM IST

நடந்து வரும் இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் இந்தியா எடுத்து இருக்கும் நிலைப்பாடு இஸ்ரேலை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏன் மத்திய கிழக்கு நாடுகளையும் இந்தியாவின் இந்த நிலைப்பாடு திரும்பி பார்க்க வைத்துள்ளது. அப்படி என்ன நடந்தது?இஸ்ரேல் - பாலஸ்தீன போர் உச்சம் அடைந்து உள்ளது. காசாவில் இருக்கும் ஹமாஸ் படையை மொத்தமாக ஒழிக்கும் வரை இந்த போர் முடிவிற்கு வராது என்று இஸ்ரேல் அறிவித்து உள்ளது. மிக நீண்ட மோசமான போரை நடத்த போகிறோம் என்று இஸ்ரேல் அறிவித்து உள்ளது. இந்த போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து நாம் பார்க்க வேண்டும்.


இந்தியாவும் பாலஸ்தீனத்துடன் வரலாற்று ரீதியாக நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது. தனி பாலஸ்தீன நாட்டின் கொள்கைக்கு நீண்ட காலம் குரல் கொடுத்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியாதான் முதல் நாடு . 1974 ஆம் ஆண்டில், பாலஸ்தீனித்தை தனி நாடாக அங்கிகரிக்க வேண்டும் என்று குரல் கொடுத்த முதல் அரபு அல்லாத நாடு இந்தியாவாகும்.


அதன்பின் வந்த இந்திய பிரதமர்களும் இதே கோரிக்கைகளை வைத்தனர். உதாரணமாக 1977ஆம் ஆண்டு, பாஜகவின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், மத்திய கிழக்குப் பிரச்சினைக்கு தீர்வு காண, "இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீன நிலத்தை காலி செய்ய வேண்டும்" என்று கூறினார். பாலஸ்தீன தனி நாடு வேண்டும் என்று கூறினார். அதன்பின் மன்மோகன் சிங் அரசும் இதே கோரிக்கையை வைத்தது. இந்த நிலையில்தான் இந்த முறை இஸ்ரேல் பாலஸ்தீன போரில் இந்தியா ஸ்மார்ட் நிலைப்பாட்டை எடுத்து உள்ளது.


அதன்படி இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதல் நடத்தியதும் அதை இந்தியா கண்டனம் செய்தது. அதன்படி இது போன்ற தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்க வேண்டும். தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இஸ்ரேலுக்கு முழு ஆதரவை இந்தியா கொடுக்கும் என்று பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார்.ஆனால் அதன்பின் இஸ்ரேல் காஸாவில் நடத்திய கடுமையான தாக்குதலை பார்த்து இந்தியா புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்தியா இதில் தனி பாலஸ்தீன நாடு என்று கோரிக்கையை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது தொடர்பாக, பாதுகாப்பான, சுதந்திரமான தனி பாலஸ்தீன நாடு அமைவதே இந்தியாவின் நிலைப்பாடு என்று இந்திய வெளியுறவுத்துறை பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மாறாது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பாதுகாப்பு, அமைதி ஏற்பட வேண்டும். இரண்டு நாடுகளும் சுதந்திரமாக வாழ்வதற்கான பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.


இது சம்பந்தமாக எங்களின் கொள்கை நீண்டகாலமாக மாறாமல் நிலையாக உள்ளது. பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் பாலஸ்தீனம் என்ற தனி நாடு இயங்க வேண்டும். பாலஸ்தீனத்தின் இறையாண்மை, சுதந்திரம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும். பாலஸ்தீனம், இஸ்ரேல் இரண்டு நாடுகளும் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள், சுதந்திரமாக அமைதியாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.


முதலில் ஹமாஸ் அமைப்பை இந்தியா எதிர்த்தது. ஆனால் அதே சமயம் இஸ்ரேல் காஸாவில் நடந்தும் தாக்குதலையும் எதிர்த்து உள்ளது. இதன் மூலம் நாங்கள் ஹமாஸுக்கு எதிரி ஆனால் தனி பாலஸ்தீனம் அமைவதற்கு எதிரி இல்லை. இதில் அமைதியான உடன்படிக்கை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் என்று நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது இந்தியா.மத்திய கிழக்கு நாடுகள் இதில் பாலஸ்தீனத்தை நேரடியாக ஆதரிக்கும் நிலையில்.. இந்தியா இஸ்ரேலை கண்மூடித்தனமாக ஆதரிக்க முடியாது என்பதால் இந்தியா நடுநிலையான முடிவை எடுத்துள்ளது.


SOURCE :Oneindia.com




Next Story
கதிர் தொகுப்பு
Trending News