பத்ம விருதுகளுக்கு பி.வி.சிந்து, மேரி கோம் பெயர்கள் பரிந்துரை!!
பத்ம விருதுகளுக்கு பி.வி.சிந்து, மேரி கோம் பெயர்கள் பரிந்துரை!!
By : Kathir Webdesk
மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் பத்ம விருதுகளுக்கு விளையாட்டு துறைகளில் இருந்து சாதித்த வீராங்கனைகளை தேர்வு செய்துள்ளன. இந்த பட்டியலில் வினேஷ் போகத், பி.வி.சிந்து, மேரி கோம்,மணிகா பத்ரா,ஹர்மன்பிரீத் கவுர் போன்ற வீராங்கனைகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது .
நாம் நாட்டின் உயரிய விருதுதாக கருதப்படும் பத்ம விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு வழங்கபடுவது வழக்கம் . இதில் கலை, அறிவியல், விளையாட்டு, இலக்கியம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, பத்ம விருதுகள் வழங்கப்படும்.
பத்ம விருதுகளுக்கு விளையாட்டுத் துறையில் இருந்து வீரர், வீராங்கனைகளின் பெயர்களை மத்திய விளையாட்டு அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.
இதில் , பத்ம விபூஷண் விருதுக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் மற்றும் பத்ம பூஷண் விருதுக்கு உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற பி.வி.சிந்து தேர்வாகியுள்ளனர்.
அதை போலவே பத்மஸ்ரீ விருதுக்கு குத்துச்சண்டை வீராங்கனை வினேஷ் போகத்,டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா,கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் இவர்களின் பெயர்களை தேர்வுசெய்துள்ளனர்.