பெண்களின் உரிமையை மதியுங்கள் - ஆப்கனுக்கு அறிவுரை சொல்கிறது கத்தார்!
By : Kathir Webdesk
பெண்களின் உரிமையை மதியுங்கள் என்று ஆப்கானிஸ்தான் தலிபான்கள் அரசிடம் கத்தார் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ஆப்கனில் பல்கலைகழகங்களில் பயில பெண்களுக்கு தலிபான்கள் அரசு தடை விதித்தது. நாடு முழுவதிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இப்போது அங்குள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களில் பெண்கள் ஊழியர்களாக இருப்பதற்கு தலிபான்களால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஆப்கனின் பொருளாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.
இந்த நிலையில், தலிபான்களின் இந்த உத்தரவை கத்தார் விமர்சித்துள்ளது. இதுகுறித்து கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், "பெண்கள் வேலை செய்வதற்கான உரிமையை மதியுங்கள். தாங்கள் செய்யும் வேலையை சுதந்திரமாக தேர்ந்தெடுப்பது என்பது மனிதர்களுக்கான உரிமை.
ஆப்கனில் பெண்கள் ஆடை கட்டுபாட்டை சரியாக கடைப்பிடிக்கவில்லை என்று கூறி தொண்டு நிறுவனங்களில் பணிபுரிய பெண்களுக்கு தலிபான்கள் அரசு தடை விதித்துள்ளதை அறிந்து கவலை கொள்கிறோம். தலிபான்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, பெண்கள் வேலைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளது.
Input From: Hindu