நீலகிரியில் ஆ.ராசாவை ஓடஓட துரத்திய பொதுமக்கள்! சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ !!
நீலகிரியில் ஆ.ராசாவை ஓடஓட துரத்திய பொதுமக்கள்! சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ !!
By : Kathir Webdesk
கனமழையால் நீலகிரி மாவட்டம். அரசு தரப்பில் அங்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ, அவை அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது.
கனமழை பெய்த உடனேயே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின் பேரில், வருவாய்த்துறை அமைச்சர் அங்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அங்கு என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை அதிகாரிகளுடன் ஆலோசித்து நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
அதேபோல துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, தேவையான நிவாரண பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார்.
பாதிக்கப்பட்ட இடங்களை அவர் பார்வையிட்டு சீர் செய்ய என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வின் அடிப்படையில் இன்று உயர் அலுவலர்கள் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அப்போது நீலகிரியில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை நடத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பணிகளை துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே நீலகிரி சென்ற தி.மு.க. தலைவர் ஸ்டாலின், வழக்கம்போல போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, 10 கோடி ரூபாய் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சின்ன, சின்ன பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
நீலகிரியில் 140 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அவைகளை சரி செய்ய எவ்வளவு நிதி தேவை என்பது அனைவருக்கும் தெரியும். இது ஒருபுறம் இருக்க, ஏதோ இவர் தனது கையில் இருந்து மக்களுக்கு பணம் கொடுப்பதுபோல மக்களை முட்டாள்கள் ஆக்கிவிட்டு சென்னைக்கு பறந்துவிட்டார்.
இந்த நாடகங்கள் அரங்கேறி முடிந்தபின் நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா தொகுதி மக்களிடம் நல்லபிள்ளையாக தலையை காட்டினார். அவரைப் பார்த்ததும் அவருக்கு ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்த மக்கள் சூழ்ந்துகொண்டு கேள்விகேட்க, காரில் இருந்து இறங்காமலேயே ஓட்டம் பிடித்தார். தி.மு.கவினர் அந்த மக்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி ஒருவழியாக தப்பித்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தி.மு.கவையும், ஆ.ராசா, ஸ்டாலினையும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.