பஞ்சமி நில மோசடி குறித்த விசாரணையில் ஆஜராகாமல் 'டிமிக்கி' கொடுத்த உதயநிதி ஸ்டாலின் - அவருக்கு பதில் களத்தில் இறக்கப்பட்டது இவரா? அஞ்சி நடுங்கும் தி.மு.க.!
பஞ்சமி நில மோசடி குறித்த விசாரணையில் ஆஜராகாமல் 'டிமிக்கி' கொடுத்த உதயநிதி ஸ்டாலின் - அவருக்கு பதில் களத்தில் இறக்கப்பட்டது இவரா? அஞ்சி நடுங்கும் தி.மு.க.!
By : Kathir Webdesk
கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என சா்ச்சை எழுந்தது.
இந்த நிலையில் பாஜக மாநிலச் செயலாளா் ஸ்ரீனிவாசன் அளித்த புகாரின்
அடிப்படையில், முரசொலி அறக்கட்டளை நிா்வாக இயக்குநரும், திமுக இளைஞரணிச்
செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின்
சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதில், சாஸ்திரிபவனில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய மாநில அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று) மாலை 3 மணியளவில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், அப்போது நிலத்தின் ஆவணங்களை எடுத்து வருமாறும் கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தேசிய ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் எல் முருகன் விசாரணை நடத்தவுள்ளார். இந்த விசாரணையின் போது, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கை, கோப்புகள், வழக்கு குறிப்புகள் உட்பட உரிய ஆவணங்களை கொண்டு வருமாறு கூறப்பட்டிருந்தது.
முரசொலி அலுவலகத்தின் நிர்வாக இயக்குநர் உதயநிதி என்பதால் அவருக்கு வரும் 19-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி இன்று தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, முரசொலி அறக்கட்டளை அறங்காவலர் என்ற முறையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அது போல் தமிழக தலைமை செயலாளர் சண்முகமும் ஆஜராகியுள்ளார்.
உதயநிதியை ஆஜராகி விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி ஆஜராகியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.