Kathir News
Begin typing your search above and press return to search.

வாக்குபதி எந்திரங்கள் மீது பழி போடும் ராகுல் , அகிலேஷ் - அமித்ஷா கடும் தாக்கு!

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்காக வாக்குபதிவு எந்திரங்கள் மீது பழி போட ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் ஆகியோர் முடிவு செய்துவிட்டதாக அமித்ஷா கூறியுள்ளார்.

வாக்குபதி எந்திரங்கள் மீது பழி போடும் ராகுல் , அகிலேஷ் - அமித்ஷா கடும் தாக்கு!
X

KarthigaBy : Karthiga

  |  30 May 2024 5:21 PM GMT

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று உத்திரபிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அங்குள்ள மகராஜ் கஞ்ச் பகுதியில் பாஜக வேட்பாளர் பங்கஜ் சவுத்ரியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அங்கு நடந்த பிரச்சார கூட்டத்தில் உரையாற்றியவர் இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் ஆன ராகுல்காந்தி மற்றும் அகிலேஷை கடுமையாக விமர்சித்தார். தனது உரையில் அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடக்கிறது. அன்று பிற்பகலில் இரண்டு இளவரசர்கள் (ராகுல் காந்தி மற்றும் மகேஷ் யாதவ்) இணைந்து செய்தியாளர் சந்திப்பை நடத்துவார்கள். அப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களால் நாங்கள் தோற்றுவிட்டோம் என கூறுவார்கள். தங்கள் தோல்விக்காக வாக்குபதி எந்திரங்கள் மீது பழி போட முடிவு செய்து இருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் முதல் ஐந்து கட்டங்களிலேயே பிரதமர் மோடி 310 இடங்களை கடந்துவிட்டார்.

ராகுல் பாபா நீங்கள் 40 இடங்களைக் கூட பெற மாட்டீர்கள். மற்றொரு இளவரசருக்கு வெறும் நான்கு இடங்கள் மட்டுமே கிடைக்கும். எதிர்க்கட்சிகளிடம் ஒரு பிரதமர் வேட்பாளர் இல்லை. அவர்கள் ஐந்து ஆண்டுகளில் 5 பிரதமர்களை வைத்திருப்பார்கள். இது ஒன்றும் பொது ஸ்டோர் இல்லை. 130 கோடி மக்கள் வாழும் ஒரு நாடு. அப்படி ஒரு பிரதமர் பணியாற்ற முடியுமா? பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள். ஆனால் பா. ஜனதாவினருக்கு அணுகுண்டுகளை கண்டு பயமில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும் .நாங்கள் அதை எடுத்து விடுவோம்.

அகிலேஷ் யாதவ் ஆட்சியில் தான் சஹாரா சிட்பண்ட் ஊழல் நடந்தது. மோடிஜி தான் அந்த பணத்தை மக்களுக்கு திரும்ப வழங்கும் பணிகளை தொடங்கினார் .முன்னாள் பிரதமர் சரண் சிங்க் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கும் பணிகளை பிரதமர் மோடி மேற்கொண்டார் .அத்துடன் உத்திரபிரதேசத்தின் அனைத்து விவசாயிகளுக்கும் மரியாதை அளித்தார். ஆனால் முந்தைய அரசுகள் இங்குள்ள கரும்பு அலைகளை மூடின. அதே நேரம் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகராஜ் கஞ்சியில் ஒரு மெகா சர்க்கரை ஆலை அமைக்கப்படும் இவ்வாறு அமித்ஷா கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News