ராகுல் காந்தி பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-பாரதிய ஜனதா போராட்டம்.!
ராகுல் காந்தி பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-பாரதிய ஜனதா போராட்டம்.!
By : Kathir Webdesk
ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கை தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தீர்ப்பு வழங்கியது.அதில், ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று கூறிய கோர்ட், முந்தைய தீர்ப்பை உறுதிசெய்தது.சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.
தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தகவல் தொழில் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ,ரபேல் விவகாரத்தில் தொடர்ந்து பொய் சொல்லி வந்த காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தி, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் வலியுறுத்தி வலியுறுத்தி இருந்த நிலையில்.பாரதிய ஜனதா கட்சி நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது என அறிவித்துள்ளது,பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு அவதூறு பரப்பிய ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டுமென வலியுறுத்தி நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் இன்று டெல்லியில் ராகுல் காந்தி மன்னிப்பு கோர காங்கிரஸ் தலைமை இடத்தை நோக்கி பா.ஜ.க வினர் இன்று பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது போலீசாருக்கும் பா.ஜ.கவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.