சட்ட விரோதமாக பணம் பரிமாற்றிய வழக்கில் இன்று ஆஜராகிறார் ராகுல் காந்தி
டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகிறார் ராகுல் காந்தி.
By : Mohan Raj
டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகிறார் ராகுல் காந்தி.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை முதலீட்டு நிறுவனமான அசோசியேட்டட் ஜனரல்ஸ் நிறுவனத்தின் 2000 கோடி சொத்துக்களை சோனியா காந்தி, ராகுல் காந்தி இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது முறைகேடு நடந்ததாக கூறி பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பான சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்து அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது, இந்த வழக்கின் விசாரணையில் சம்மன் அனுப்பப்பட்டது அதன் அடிப்படையில் டெல்லியில் உள்ள மத்திய அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ஆஜராக உள்ளார்.
இதனை தொடர்ந்து ராகுல் காந்தியுடன் மத்திய அமலாக்கத் துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த பேரணிக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது சட்டம் ஒழுங்கு நிலைமையை கருத்தில் கொண்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.