Kathir News
Begin typing your search above and press return to search.

பாரத் ஜோடோ யாத்திரை தோல்வி - வழக்கம்போல் தோற்றத்தை மாத்திய ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 12 மாநிலங்களில் நான்காயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நான்கு மாத காலம் பாதயாத்திரை நடத்தினார்.

பாரத் ஜோடோ யாத்திரை தோல்வி - வழக்கம்போல் தோற்றத்தை மாத்திய ராகுல் காந்தி

KarthigaBy : Karthiga

  |  2 March 2023 7:15 AM GMT

இந்திய ஒற்றுமையாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி நடத்திய பாதயாத்திரையின் போது அவர் முடி வெட்டிக் கொள்ளவில்லை. தாடி வளர்த்து வந்தார் . யாத்திரை முடிந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் "யாத்திரை முழுவதும் தாடியை எடுப்பதில்லை என்று முடிவு செய்திருந்தேன் .இப்போது யாத்திரை முடிந்த நிலையில் அதை தொடர்வதா? வேண்டாமா? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டி உள்ளது" என குறிப்பிட்டிருந்தார் .இந்த நிலையில் அவர் முடியை வெட்டிக்கொண்டு தாடியையும் வெட்டி அழகான புதிய தோற்றத்திற்கு மாறி உள்ளார்.


இந்த புதிய தோற்றத்தை காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள அது வைரலாகி இருக்கிறது. இந்த புதிய தோற்றத்துடன் அவர் லண்டனில் தான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற இருக்கிறார் . மேலும் 'பெரிய தரவும் ஜனநாயகமும் ', 'இந்திய- சீன உறவுகள் 'என்ற தலைப்புகளில் இந்திய வம்சாவளி பேராசிரியர் சுருதி கபிலாவுடன் விவாதிக்கவும் உள்ளார்.


ராய்ப்பூர் காங்கிரஸ் மாநாடு முடிந்த நிலையில் ராகுல் காந்தி நேற்று முன்தினம் ஒருவாறு கால பயணமாக லண்டன் சென்றடைந்தார். இதை ஒட்டி அவர் துவிட்டரில் வெளியிட்ட பதிவில் "நான் கல்வி கற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு சென்று கேம்பிரிட் ஜட்ஜ் வணிக கல்லூரியில் விரிவுரை வழங்க ஆவலுடன் காத்திருக்கிறேன். புவிசார் அரசியல், சர்வதேச உறவுகள் ,பெரிய தரவும் ஜனநாயகமும் உள்ளிட்ட பல்வேறு களங்களில் ஒளிரும் மனம் கொண்டவர்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் " என குறிப்பிட்டுள்ளார்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News