தன் தொகுதிக்கு சென்றதை விட, வெளிநாடுகளுக்கு "குதூகலிக்க" பறந்தது தான் அதிகமாம்! சந்தி சிரிக்கும் ராகுல் காந்தியின் நிலை!
தன் தொகுதிக்கு சென்றதை விட, வெளிநாடுகளுக்கு "குதூகலிக்க" பறந்தது தான் அதிகமாம்! சந்தி சிரிக்கும் ராகுல் காந்தியின் நிலை!
By : Kathir Webdesk
2014-ஆம் ஆண்டு அமேதி தொகுதியில் வெற்றி பெற்றார் ராகுல் காந்தி. அப்போதில் இருந்து இன்று வரை, 16 முறை வெளிநாட்டு பயணங்களுக்கு சென்றுள்ளார் ராகுல் காந்தி. இது இவரது சொந்த தொகுதிக்கு சென்றதை விட பன்மடங்கு அதிகம் என்ற அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளி வந்துள்ளது.
அதில் பல முறை, எங்கு செல்கிறார், எதற்கு செல்கிறார் என்ற தகவல் பொதுவெளியில் இல்லை. மக்களவை செயலகம் எம்.பி-க்கள் எங்கு செல்கின்றனர் என்று கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்ற சுற்றறிக்கை அனுப்பியும் அதை ராகுல் காந்தி பின்பற்றுவது இல்லை என்பதே நிதர்சனம்.
இந்நிலையில், சமீபத்தில் ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநில தேர்தல்கள் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்து பறந்து சென்றார் ராகுல் காந்தி. பா.ஜ.க முக்கிய தலைவர்கள் அனைவரும் சூறாவளி பிரச்சாரம் செய்து தேர்தலில் வெற்றி பெற சுழன்றுக் கொண்டு இருந்த போது, காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்திற்கு உதவாமல் இப்படி பொறுப்பின்றி வெளிநாடு குதூகலத்திற்கு சென்று விட்டாரே என காங்கிரஸ் நிர்வாகிகளே கண்ணீர் வடித்து முகம் சுளித்தனர்.
இந்நிலையில், கடந்த திங்களன்று ராகுல் காந்தி மீண்டும் ஒருமுறை வெளிநாட்டுக்கு பறந்து விட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது. ஒரு வார காலம் ராகுல் காந்தி வெளிநாட்டில் தங்கி இருப்பார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தியானம் செய்வதற்காக வெளிநாடு சென்றுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா பேட்டி அளித்து இருந்தார். உலகம் முழுக்க இருந்து தியானம் செய்ய இந்தியாவிற்கு வரும் போது, ராகுல் காந்தி மட்டும் அப்படி எந்த நாட்டிற்கு சென்று தியானம் செய்கிறார் என்ற கேள்வி எழுகிறது!