டெல்லியில் கலவரம்: இன்ப சுற்றுலா சென்றுள்ளார், ராகுல் காந்தி!
டெல்லியில் கலவரம்: இன்ப சுற்றுலா சென்றுள்ளார், ராகுல் காந்தி!

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள எந்த ஒரு முஸ்லிமுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் முஸ்லிம்களை தூண்டிவிட்டு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும், சில முஸ்லிம் மதவெறி அமைப்புகளும், சில முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளும் தொடர்ந்து தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக டெல்லியில் முஸ்லிம் மதவெறி கும்பல்கள், திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வருகையை சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டு இந்த கலவரத்தை அரங்கேற்றி உள்ளனர்.
பெட்ரோல் குண்டுகள், கற்கள், ஆசிட் பாட்டில்கள், துப்பாக்கிகள் இவை அனைத்தும் போராட்டம் நடத்திய முஸ்லிம் மதவெறி கும்பல்கள் தயாராக வைத்துள்ளன என்பதே இதற்கு சான்று.
இந்த கலவரத்தில் போலீஸ் ஏட்டு ரத்தன் லால், உளவுத்துறை அதிகாரி அங்கிட் சர்மா உள்பட 35 பேர் பலியாகி உள்ளனர். நரேந்திர மோடி அரசின் அதிரடி நடவடிக்கைகளால் டெல்லி கலவரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் இந்த கலவரத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயன்று வருகின்றன. தர்ணா போராட்டம், பேரணி என்ற பெயரில் டெல்லியில் அமைதியை சீர்குலைக்கும் வேளையில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இறங்கி உள்ளன.
இது ஒருபுறமிருக்க, டெல்லி, அல்லோகலப் பட்டு இருக்கும் இந்த நேரத்தில் காங்கிரசின் அடுத்த தலைவர் என்று சொல்லப்படுகின்ற ராகுல் காந்தியை காணவில்லை. அவர் எந்த நாட்டிற்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஒரு பொறுப்புள்ள எதிர்க் கட்சியின் முக்கிய தலைவராக உள்ள ராகுல்காந்தி, பொறுப்பற்ற வகையில் வெளிநாட்டிற்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளது டெல்லி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.