Kathir News
Begin typing your search above and press return to search.

ராகுல் காந்தி சோம்பேறித்தனமான அரசியல் நடத்துகிறார் - மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர்!

ராகுல் காந்தி சோம்பேறித்தனமான அரசியல் நடத்துகிறார். ஏதேனும் வினோதமான குற்றச்சாட்டுகளை கூறிவிட்டு காணாமல் போய்விடுகிறார் என்று மத்தியமுந்திரி ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.

ராகுல் காந்தி சோம்பேறித்தனமான அரசியல் நடத்துகிறார் -  மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர்!
X

KarthigaBy : Karthiga

  |  23 April 2023 1:15 PM GMT

கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் . அவர் கர்நாடக சட்டசபை தேர்தலை ஒட்டி ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-


கர்நாடகா பா.ஜனதாவிலிருந்து ஜெகதீஷ் ஷெட்டர் போன்ற லிங்காயத்து தலைவர்கள் விலகி காங்கிரஸில் சேர்ந்து இருக்கலாம் .அதற்காக அந்த சமூகத்தின் ஆதரவை பா.ஜனதா அழிந்து விடும் என்று கருதக்கூடாது. பா.ஜ.க மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதில் எந்த முட்டுக்கட்டையும் இல்லை. மே 13- ஆம் தேதி அவர்கள் தேர்தலில் தோல்வியடைவதுடன் இதுவரை சமூகத்தில் பெற்றுள்ள மரியாதையையும் இழந்து விடுவார்கள்.


கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது லிங்காயத்துகள் இந்துக்களே அல்ல என்று சித்தராமையா போன்றவர்கள் பிரச்சாரம் செய்தனர். அதன் மூலம் அந்த சமூகத்தில் பிளவு ஏற்படுத்தும் என்றனர் . ஆனால் அது எடுபடவில்லை. கர்நாடக தேர்தலில் 74 புது முகங்களை நிறுத்த பா.ஜனதா மேலிடம் எடுத்த முடிவு மிகவும் துணிச்சலான முடிவு . தலைமுறை மாற்றத்தை மாநில பா.ஜனதா தலைவர்கள் ஏற்று கொண்டுள்ளனர்.


கர்நாடகா எதிர்காலத்துக்கான கட்சி பா. ஜனதா ஆகும் . இதனால் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளம் போன்றவை சுரண்டல் அரசியல் நடத்துகின்றன. ராகுல் காந்தி சோம்பேறித்தனமான அரசியல் நடத்துகிறார் அவர் ஏதேனும் வினோதமான குற்றச்சாட்டுகளையும் சில வாக்குறுதிகளையும் கூறிவிட்டு காணாமல் போய்விடுகிறார். மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற பாடுபட வேண்டும் என்ற நோக்கம் அவரிடம் இல்லை.


சாதிவெறி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்கிறார். அவரது கட்சி பல்லாண்டு காலம் இந்தியாவை ஆண்டது என்பதை அவர் மறந்து விடுகிறார் .ஆட்சியில் இருக்கும் போது அதற்காக காங்கிரஸ் என்ன செய்தது? பிரதமர் மோடி அரசுதான் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நிறைய செய்துள்ளது. வாக்குறுதி அளித்துவிட்டு மறைந்து விடுவது தான் காங்கிரசின் பாணி. இவ்வாறு அவர் கூறினார்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News