Kathir News
Begin typing your search above and press return to search.

ராகுல் காந்தியின் பொய்கள் 101 - ரயில்வே PMCARESக்கு நிதி அளித்ததா?

ராகுல் காந்தியின் பொய்கள் 101 - ரயில்வே PMCARESக்கு நிதி அளித்ததா?

ராகுல் காந்தியின் பொய்கள் 101 - ரயில்வே PMCARESக்கு நிதி அளித்ததா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Feb 2021 8:08 AM GMT

எப்போது புதுப்‌ பொய்யை அவிழ்த்து விடலாம், நமது கணிதத் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டலாம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வழிமேல் விழி வைத்து காத்திருப்பார் போலும். ரயில்வே ஷ்ரமிக் ரயில்களின் மூலம் வருவாய் ஈட்டியதாக உளறிக் கொட்டி மாட்டிக் கொண்டு சில நாட்களே ஆகும் நிலையில் தற்போது வருவாய் இல்லாமல் ரயில்வே மத்திய அரசிடம் உதவி கேட்கிறது என்று அந்தர் பல்டி அடித்துள்ளார்.

பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியை (PMNRF) ஒதுக்கிவிட்டு கொரோனா நிவாரண நிதி சேகரிக்க ‌PMCARES என்ற புதிய அமைப்பை அறிமுகப்படுத்தியதில் இருந்து காங்கிரஸ் கட்சியினருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. PMNRF நிர்வாகக் குழுவில் காங்கிரஸ் தலைவருக்கு உறுப்பினர் இடம் அளிக்கப்படும் நிலையில் ‌PMCARES முழுக்க முழுக்க அரசில் பதவி வகிப்பவர்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் என்பது தான் இதற்கு முக்கியமான காரணம். இதனால் பல வகைகளிலும் ‌PMCARES நிதியில் ஊழல் இருக்கிறது என்று நிரூபிக்க முயற்சித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், ‌PMCARESக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கியதால் முன்னாள் ரயில்வே பணியாளர்களுக்கு பென்ஷன் வழங்க முடியவில்லை என்ற பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார் ராகுல் காந்தி. காங்கிரஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் பதிவிட்ட ட்வீட்டில் "ரயில்வேக்கு தனது ஓய்வூதியம் மற்றும் ஊதியம் வழங்க நிதி இல்லை என்றாலும் ‌PMCARESக்கு ₹ 151 கோடி நிதி வழங்கி இருக்கிறது" என்று கூறியிருந்தது.

இதை சில பயணியர் ரயில்களை தனியார் செயல்பாட்டுக்கு விட எடுக்கப்பட்டு இருக்கும் முடிவுடன் தொடர்பு படுத்தி முதலில் ஒரு பொது நிறுவனத்தை ஒன்றுமில்லாமல் செய்து பின்னர் அதை தனியாருக்கு தாரை வார்க்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதி தான் இது என்பது போல் காங்கிரசார் பேசி வருகின்றனர். பொய் சொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தால் விடுவேனா‌ பார்‌ என்று திரியும் ராகுல் காந்தியும் இந்த விஷயத்தைப்‌ பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரயில்வேயை நஷ்டப்படுத்தி பெரு முதலாளிகளுக்கு விற்கப் போவதாக அவரது பதிவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் உண்மை என்ன?

1)ரயில்வே தனது நிதியில் இருந்து PMCARESக்கு நிவாரண நிதி அளிக்கவில்லை.

2)இந்த ₹ 151 கோடி நிதி ரயில்வே பணியாளர்கள் அவர்களது ஒரு நாள் ஊதியத்தில் இருந்து கொடுத்த நிதி. இதைப் பற்றி ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ரயில்வே பணியாளர் யூனியன் அனுப்பி இருந்த கடிதத்தை ட்வீட் செய்திருந்தார்.

3)இந்த விவகாரத்தைப் பற்றி முதலில் செய்தி வெளியிட்ட ஏசியன் ஏஜ் செய்தி நிறுவனம், பென்ஷன் வழங்குவதற்கு ரயில்வே துறை மத்திய அரசின் உதவியை நாடி இருக்கிறது என்று‌ மட்டுமே குறிப்பிட்டுள்ளது. காங்கிரசோ ஊதியத்திற்கும் பென்ஷனுக்கும் ரயில்வேயிடம் நிதியே இல்லை என்று புளுகி இருக்கிறது.

4)16 லட்சம் முன்னாள் பணியாளர்களுக்கு பென்ஷன் வழங்கி வரும் ரயில்வே கிட்டத்தட்ட ₹ 50,000 கோடி நிதியை இதற்காக செலவிடுகிறது. ₹ 151 கோடியை ரயில்வே நிதியில் இருந்தே கொடுத்திருந்தாலும் நஷ்டம் அடையும் அளவுக்கு அது பெரிய தொகையே இல்லை

5)கடந்த காலங்களிலேயே மத்திய அரசு பென்ஷன் சுமையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ரயில்வே துறை கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. ரயில்வேயின்‌ மொத்த வருவாயில் 25% பென்ஷன் வழங்குவதில் செலவழிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. PMCARES ஏற்படுத்தப்படுவதற்கு முன்னரே, ஏன் கொரோனா வைரஸ் தாக்குவதற்கு முன்னரே ரயில்வே நிதியமைச்சகத்திடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

நன்றி: Opindia

Next Story
கதிர் தொகுப்பு
Trending News