Kathir News
Begin typing your search above and press return to search.

ரெயில் டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா பொருத்த திட்டம் - ஏன்?

ரெயில்களில் பயணிகளுடன் மோதல் சம்பவங்கள் நடந்து வருவதால் வெளிப்படை தன்மைக்காக டிக்கெட் பரிசோதகர்கள் 'பாடி கேமரா' அணியும் முறை சோதனை ரீதியாக அமல்படுத்தப்பட்டது.

ரெயில் டிக்கெட் பரிசோதகர்கள்  உடலில் கேமரா பொருத்த திட்டம் - ஏன்?

KarthigaBy : Karthiga

  |  6 May 2023 5:45 AM GMT

சமீபத்தில் ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக டிக்கெட் பரிசோதகர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டார் . இதுபோல் பயணிகள் அராஜகமாக நடந்து கொள்வதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன. இத்தகைய புகார்கள் வரும்போது அவை குறித்த உண்மை தன்மையை அறிவதற்காக டிக்கெட் பரிசோதவர்கள் உடலில் கேமரா பொருத்துவது அமல்படுத்தப்பட்டுள்ளது. முதலில் மத்திய ரயில்வேயில் சோதனை முறையில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.


இதற்காக 50 'பாடி கேமராக்கள்' வாங்கி மும்பை கோட்ட டிக்கெட் பரிசோதனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. டிக்கெட் பரிசோதனைகளுக்கு பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது .இந்த கேமராவின் விலை 9000. அதில் 20 மணி நேரத்திற்கு நிகழ்வுகளை பதிவு செய்ய முடியும். இதன் மூலம் ஒரு புகார் வந்தால் யார் மீது தவறு என்று வீடியோ காட்சியை போட்டு பார்த்த தெரிந்து கொள்ளலாம்.


இத்திட்டத்தால் டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் பயணிகளின் பொறுப்புணர்வு அதிகரிக்கும் . தேவையின்றி பெயர் கெட்டுப் போவது தவிர்க்கப்படும் என்று ரயில்வே செய்தி தொடர்பாளர் தெரிவித்தார் . முதலில் 2005 ஆம் ஆண்டு இங்கிலாந்து போலீசாருக்கு இத்தகைய கேமரா பொருத்தப்பட்டன. பிறகு வேறு சில நாடுகளில் போலீசாரும் அதிகாரிகளும் பொருத்திக் கொண்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News