அம்ரித் பாரத் ரயில் தயாரிப்பை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டம்!
அம்ரித் பாரத் ரயில் தயாரிப்பை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது .
By : Karthiga
அனைத்து தரப்பு மக்களும் பயணிக்கும் வகையில் சாதாரண வந்தே பாரத் ரயில் தயாரிக்க முயற்சி எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக இரண்டு சாதாரண வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து கடந்த ஆண்டு நவம்பரில் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலில் இருபுறமும் இன்ஜின்கள் பொருத்தப்பட்டு எட்டு முன்பதிவு இல்லாத பெட்டிகள், மூன்றாம் வகுப்பு ஏ.சி பிரிவில் 12 பெட்டிகள் மாற்றுத்திறனாளிகள் ,இலக்கேஜ் உட்பட மொத்தம் 22 பெட்டிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் இந்த ரயில்கள் தர்பங்காவிலிருந்து அயோத்தி வழியாக ஆனந்த் விஹாருக்கும், மால்டா நகரத்திலிருந்து பெங்களூருக்கும் கடந்த ஆண்டு டிசம்பரில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டன. இந்த ரயில்களுக்கும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் அம்ரித் பாரத் ரயில்களின் தயாரிப்பை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் சென்னை ஐ.சி. எஃப்-ல் 492 பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. 2024-25 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலைகளில் மொத்தம் 50 அம்ரித் பாரத் ரெயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏசி அல்லாத ரயில்களில் பயணிக்க விரும்பும் மக்களை இலக்காகக் கொண்டு சிறந்த வசதிகளுடன் இந்த ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:-
பல வழித்தடங்களில் விரைவு ரயில்களில் பொது வகுப்பு பெட்டிகள் தேவைப்படுவதால் இந்த ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன .இந்த ரயில் மணிக்கு 1330 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது. புதிய ரயில்களில் கழிப்பறைகளில் மேம்பட்ட வடிவமைப்பு, சிசிடிவி கேமராக்கள், தூங்கும் வசதி, பெட்டிகளின் மேல் படுக்கைக்கு எளிதாக செல்ல வசதி உட்பட பல்வேறு வசதிகள் இடம் பெற உள்ளன. சென்னை ஐ.சி.எப் ரயில் பெட்டி தொழிற்சாலை ரயில்வேயில் நவீனப் பெட்டி தொழிற்சாலை ஆகிய ஆலைகளில் இந்த ரயில்கள் தயாரிக்கப்பட உள்ளன. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
SOURCE :kaalaimani.com