ராஜஸ்தான் அரசியலில் நொடிக்கு நொடி திருப்பம்.. பா.ஜ.க இன்று அவசர ஆலோசனை - சச்சின் பைலட்டின் அடுத்தகட்ட நகர்வு எப்படியிருக்கும்.?
ராஜஸ்தான் அரசியலில் நொடிக்கு நொடி திருப்பம்.. பா.ஜ.க இன்று அவசர ஆலோசனை - சச்சின் பைலட்டின் அடுத்தகட்ட நகர்வு எப்படியிருக்கும்.?

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வராக இருந்து வந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
சச்சின் பைலட் தன்னிடம் இருபதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு இருப்பதாக கூறி வந்தார். ஆனால் எங்களுக்கு நூறுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு இருக்கிறது என்று அசோக் கெலாட் தரப்பு தெரிவித்தது.
இதனை தொடர்ந்து ஏற்பட்ட மனக்கசப்பை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநில துணை முதல் பொறுப்பில் இருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் ஆகிய இரு பதவிகளில் இருந்தும் சச்சின் பைலட்டை காங்கிரஸ் அதிரடியாக நீக்கியது. இதனால் ராஜஸ்தான் அரசியலில் உச்சபட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த நேரத்தில் சச்சின் பைலட் பாஜகவில் இணையப்போகிறாரா.? இல்லை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறாரா.? என்பது போன்ற பல்வேறு யூகங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ராஜஸ்தானின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பிரதான எதிர்க்கட்சியான பாஜக இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளது.
தலைநகர் ஜெய்ப்பூரில் நாளை நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் ராஜஸ்தான் மாநில பாஜகவின் முக்கிய தலைவர்களான வசுந்தரா ராஜே உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரசில் இருந்து பைலட் நீக்கப்பட்டுள்ள நிலையில் பாஜகவின் இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.