Kathir News
Begin typing your search above and press return to search.

முப்படைகளும் இணைக்கப்படும் - ராஜ்நாத் சிங்

முப்படைகளின் இணைப்பை நோக்கி நாடு வேகமாக நடை போட்டு வருவதாக ராஜ்நாத்சிங் கூறினார்

முப்படைகளும் இணைக்கப்படும் - ராஜ்நாத் சிங்

KarthigaBy : Karthiga

  |  13 Sep 2022 8:45 AM GMT

டெல்லியில் 'ராணுவ தளவாடங்கள்' 'என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.ராணுவ தளபதி மனோஜ் பாண்டடே ,விமானப்படை தளபதி பி.ஆர்.சௌத்ரி, கடற்படை தளபதி ஹரிகுமார், நிதி ஆயோ க்உறுப்பினர் வி. கே .சரஸ்வத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


கருத்தரங்கில் ராஜ்நாத்சிங் பேசியதாவது:-

ரயில்வே துறையில் இந்தியா வேகமாக முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் 9 ஆயிரம் கிலோ மீட்டர் நீள ரயில்பாதை இரட்டை பாதை ஆக்கப்பட்டது .ஆனால் 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு ஐந்து ஆண்டுகளில் 1900 கிலோமீட்டர் நீள ரயில் பாதை மட்டுமே இரட்டை பாதை ஆக்கப்பட்டது. சிவில் மற்றும் ராணுவ அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு நிலவுவது அவசியம் .இருதரப்பினரும் இங்கு வந்திருப்பது இந்தியாவின் இலக்கை எட்டுவதில் உள்ள உறுதிபாட்டை காட்டுகிறது.


இந்தியாவின் முப்படைகளையும் இணைப்பதை நோக்கி இந்தியா வேகமாக நடைபோட்டு வருகிறது. பொதுவான தளவாட மையம் இருக்க வேண்டும் என்பது நமது நோக்கம். அப்போதுதான் ஒரு படையின் வளங்கள் எவ்வித இடையூறும் என்று மற்ற படைகளுக்கும் கிடைக்கும்.


இவ்வாறு அவர் பேசினார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News