Kathir News
Begin typing your search above and press return to search.

30 இலட்சம் பேருக்கு வேலை - 2025க்குள் பாதுகாப்பு தொழில் துறையில் 26 பில்லியன் முதலீடு.!

30 இலட்சம் பேருக்கு வேலை - 2025க்குள் பாதுகாப்பு தொழில் துறையில் 26 பில்லியன் முதலீடு.!

30 இலட்சம் பேருக்கு வேலை - 2025க்குள் பாதுகாப்பு தொழில் துறையில் 26 பில்லியன் முதலீடு.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Nov 2019 12:40 PM IST


பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி நிறுவனங்கள் ‘இந்தியாவில் உற்பத்தி’த் திட்டத்தின் பகுதியாகும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தாய்லாந்தின் பாங்காக் நகரில் இந்திய வர்த்தக சபை ஏற்பாடு செய்திருந்த ‘பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்த்து கண்காட்சி-2019’-ல் ‘மேலெழும் இந்தியா’ எனும் வணிகக் கருத்தரங்கில் பேசிய அவர், 2025-க்குள் பாதுகாப்பு தொழில் துறையில் 26 பில்லியன் முதலீடு என்ற இலக்கை எட்டும் அரசின் நிலையை வலியுறுத்தினார்.


இறக்குமதிகளை நம்பி இருப்பதைக் குறைப்பதற்கு இந்தியாவில் உற்பத்தி என்ற திட்டத்தின் கீழ், பாதுகாப்புத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் முக்கிய குவி மையமாக இந்தியாவில் உற்பத்தித் திட்டம் உள்ளது என்றும் அவர் கூறினார்.


‘பாதுகாப்பு உற்பத்திக்கான நகல் கொள்கை 2018’-ன் கீழ், 2025-க்குள் இந்தியாவின் பாதுகாப்பு துறைசார்ந்த ஏற்றுமதியை 5 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் ராஜ்நாத் சிங் கூறினார். “ஒரு பக்கத்தில் இந்த இலக்கு லட்சியமாக இருக்கும் போது, கடந்த இரண்டாண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி ஏறத்தாழ ஆறு மடங்கு அதிகரித்திருப்பது ஊக்கமளிப்பதாக உள்ளது” என்று அவர் மேலும் கூறினார். 2025-க்குள் விண்வெளி ஆய்வு, பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் சேவைகளில் 10 பில்லியன் டாலர் முதலீடு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், இதன்மூலம் இரண்டு முதல் மூன்று மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News