Kathir News
Begin typing your search above and press return to search.

புதிய அழகுடன் டெல்லியில் ஜொலிக்கும் ராஜபாதை என்று அழைக்கப்படும் 'கடமைப்பாதை'

நாட்டின் தலைநகரான டெல்லியின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று மூன்று கிலோ மீட்டர் நீளமுள்ள ராஜபாதை புதிதாக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது

புதிய அழகுடன் டெல்லியில் ஜொலிக்கும் ராஜபாதை என்று அழைக்கப்படும் கடமைப்பாதை
X

KarthigaBy : Karthiga

  |  9 Sept 2022 1:30 PM IST

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியா கேட்டில் இருந்து ஜனாதிபதி மாளிகை வரையிலான சாலைக்கு கிங்ஸ் வே என பெயர் சூட்டப்பட்டது. இந்தியில் அதை ராஜபாதை என்று அழைத்தனர் .இந்த ராஜபாதையில் தான் வருடம் தோறும் குடியரசு தின விழாவின் போது முப்படைகளின் அணிவகுப்பு நடந்து வருகிறது. இந்த சாலை கடமையை செய்யும் சாலை என்ற பொருள் படும்படி கர்த்தவ்ய பாத் (கடமைப் பாதை )என மாநகராட்சியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இந்த பாதை மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் முற்றிலுமாய் மறு வடிவமைப்பு செய்து அழகுபடுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பாதையும் இந்தியா கேட் ,சி ஹெக்-சாகன்-மான்சிங் ரோடு, மான்சிங் ரோடு- ஜனபத், ஜனபத்- ரவிமார்க் ரவிமார்க்- விஜய் சவுக்என ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.


அடக்கப்படுத்தப்பட்ட நிலப்பரப்புகள் பசுமையான புல்வெளிகள் நடைபாதைகள் மேம்படுத்தப்பட்ட பலகைகள், கண் கவர் விளக்குகள் நீரூற்றுகள் என அமைக்கப்பட்ட அனைத்து அழகு சேர்க்கின்றன இந்த கடமை பாதையில் இனி திருட்டையும், புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் சேதப்படுத்துவதையும் தடுக்க போலீசார்ருடன் தனியார் பாதுகாப்பு படையினர் என்பதற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு 28 அடி உயர பிரம்மாண்ட கிரானைட் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இந்தியா கேட் முதல் மான்சிங் ரோடு வரையில் தோட்டப்பகுதியில் உணவுப் பொருள்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. இந்தியா கேட் பகுதியில் இரண்டு பிளாக்குகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு பிளாக்கிலும் எட்டு கடைகள் உள்ளன. இவற்றில் தங்கள் மாநில உணவு ஸ்டால்களை நிறுவ சில மாநிலங்கள் விரும்பம் தெரிவித்துள்ளன.



ஐந்து விற்பனை மண்டலங்கள் அமைக்கப்பட்டு தலா நாற்பது வியாபாரிகள் அனுமதிக்கப்படுவார்கள். விற்பனை மண்டலங்களில் மட்டுமே ஐஸ்கிரீம் வண்டிகள் அனுமதிக்கப்படும் .இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. என்றாலும் சாலைகளில் ஐஸ்கிரீம் தள்ளுவண்டிகள் அனுமதிக்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்த ராஜபாதையில் 1,125 வாகனங்கள் நிறுத்த இட வசதியும் 35 பஸ்கள் நிறுத்துமிடமும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News