ராமேஸ்வரம் கோயில்: சிறப்பாக நடைபெற்ற ஆடித் தேரோட்டம்!
இராமேஸ்வரம் திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற ஆடித் தேரோட்டம்.
By : Bharathi Latha
ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவிலில் ஆடித் தேரோட்டம் சிறப்பான முறையில் நடந்தது. இந்த கோவிலில் நடைபெற்ற ஆடித் திருக்கல்யாண திருவிழா ஜூலை 23ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் சிறப்பான முறையில் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த ஆடி தேரோட்டம் ஆனது தற்போது நிறைவாக முடிந்துள்ளது. மேலும் நேற்று ஒன்பதாவது நாள் திருவிழாவாக கோவிலில் இருந்து அம்மன் பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடாகி தேரில் எழுந்தருளிய காட்சி பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
மகா தீபாராதனை நடைபெற்று கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வினியோகிக்கப்பட்டது. கோயில் துணை ஆணையர் மாரியப்பன், கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், நகராட்சி தலைவர் நாசர்கான், கோயில் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், பேஸ்கார் கமலநாதன் ஆகியோர் இந்த ஆடு தேரோட்ட திருவிழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. தேரின் வடத்தை ஏராளமான பக்தர்கள் இழுத்து கோயில் ரத வீதியில் வலம் வர தேரோட்டம் உற்சாகமாக நடந்தது.
குறிப்பாக இந்த நிகழ்ச்சி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை தேரோட்டம் நடந்து முடிந்த பிறகு பக்தர்களின் பாதுகாப்பு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் இல்லாதது ரத வீதியில் நின்ற பல்வேறு வாகனங்கள் மற்றும் தேரை இழுத்து சென்று பக்தர்களுக்கு பெரும் இடையூறாக அமைந்தது.
Input & Image courtesy:Dinamalar News