அயோத்தி பூமி பூஜையை தூர்தர்ஷனில் ஒளிபரப்ப கம்யூனிஸ்டு கட்சி கடும் எதிர்ப்பு.! #Rammandhir #DDTelecast
அயோத்தி பூமி பூஜையை தூர்தர்ஷனில் ஒளிபரப்ப கம்யூனிஸ்டு கட்சி கடும் எதிர்ப்பு.! #Rammandhir #DDTelecast

அயோத்தியில், 5-ந் தேதி நடைபெற உள்ள ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சி, தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி பினோய் விஸ்வம் கடிதம் எழுதி உள்ளார்.
அதில் அவர்
"தூர்தர்ஷனின் செயல்பாடுகள் தொடர்பான பிரசார் பாரதி சட்டத்தின் 12(2)ஏ) பிரிவு, 'நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட் டையும், அரசியல் சட்ட மாண்புகளையும் உறுதி செய்வதே தூர்தர்ஷனின் நோக்கம்' என்று கூறுகிறது. எனவே, தூர்தர் ஷனை ஒரு மத நிகழ்ச்சிக்கு பயன்படுத்துவது, தேசிய ஒருமைப் பாட்டு விதிமுறைகளுக்கு முரணாக அமையும். ஆகவே, பூமி பூஜை நிகழ்ச்சியை ஒளிபரப்புவதை தவிர்க்க வேண்டும்" கூறியுள்ளார்.
ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளை கடந்து தான் ராம ஜென்ம பூமி கோவில் அடிக்கல் பூஜை வரையில் வந்துள்ளது. இந்து சமுதாய மக்கள் இந்த ததரிசனத்தை மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். காரணம் 108 திவ்ய தேசங்களில் ராமபிரானின் அவதாரமான இந்த தேசம் மிகவும் முக்கியமானது. இதனை கம்யூனிஸ்ட் எதிர்த்து மக்களின் கோபத்திற்க்கு ஆளாகியுள்ளது.