Kathir News
Begin typing your search above and press return to search.

ஆர்பிஐ அதிரடியாக அனைத்து வங்கிகளுக்கும் தெறிக்க விட்ட திடீர் உத்தரவு

வங்கிக் கடன் வாங்கியவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மிகப் பெரிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

ஆர்பிஐ அதிரடியாக அனைத்து வங்கிகளுக்கும் தெறிக்க விட்ட திடீர் உத்தரவு

KarthigaBy : Karthiga

  |  17 Sep 2023 5:30 PM GMT

இந்திய ரிசர்வ் வங்கி சில நாட்களுக்கு முன்பு கடன் வாங்குபவர்களின் நலனுக்காக ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி சிலஅறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடனை முழுமையாக திருப்பிச் செலுத்திய 30 நாட்களுக்குள் அனைத்து அசையும் அல்லது அசையா சொத்து ஆவணங்களையும் வாடிக்கையாளர்களிடம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


அதேபோல, பதிவுக் கட்டணமும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. வங்கிகள் இந்த அறிவுறுத்தல்களுக்கு இணங்கத் தவறினால், கடனாளிக்கு ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் என்ற அளவில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுபோன்ற அசையும் அல்லது அசையா சொத்து ஆவணங்களை வழங்குவதில் வங்கிகள் பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன. இது வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, வாடிக்கையாளரின் அசல் ஆவணங்களில் ஏதேனும் சேதம் ஏற்பட்டாலோ அல்லது அவை தொலைந்து போனாலோ, அத்தகைய சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட வங்கிகள்தான் பொறுப்பேற்க வேண்டும். கடன் வாங்குபவரின் அத்தகைய ஆவணங்களின் நகல் அல்லது சான்றளிக்கப்பட்ட நகலை வங்கி மூலம் பெறவும் இது உதவும். இதுமட்டுமின்றி இதற்கான இழப்பீட்டையும் வங்கிகள் வழங்க வேண்டும்.


கடன் வாங்கியவர்கள் முழு கடனையும் திருப்பிச் செலுத்திய பிறகு, செயல்முறையை முடிக்க நிதி நிறுவனங்களுக்கு (வங்கிகளுக்கு) 30 நாட்கள் கூடுதல் அவகாசம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், வங்கியின் மொத்த கால அளவு 60 நாட்கள் ஆகும். அதன் பிறகும் கடன் வாங்கியவர் தனது ஆவணங்களைப் பெறவில்லை என்றால் அந்த வங்கி ஒவ்வொரு நாளும் ரூ. 5000 இழப்பீடு வழங்க வேண்டும்.


SOURCE :samayam.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News