டிசம்பர் மாதம் முதல் கடனுக்கான வட்டி உயர்வு: ரிசர்வ் வங்கி அதிகாரப் பூர்வமான அறிவிப்பு!
டிசம்பர் மாதத்தில் இருந்து கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி கூறி இருக்கிறது.
By : Bharathi Latha
கொரோனா காலத்தில் இருந்த இந்தியாவில கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மக்கள் தங்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும் கடன்களை வாங்குகிறார்கள். ஆனால் நாட்டின் ஏற்பட்ட மிகப்பெரிய நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரிசர்வ் வங்கி மக்களின் மீது விதிக்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்த விதமான மாற்றமும் செய்யாமல், பழைய வட்டி விகிதத்திலேயே வட்டி வசூலித்து வந்தது.
ஆனால் தற்போது நான் நாடு மீண்டும் திரும்பி பழைய நிலைமைக்கு திரும்புகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்திய பொருளாதாரத்தை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் தற்போது கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துகிறது. பணம் வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி ரிசர்வ் வங்கி கடந்த சிலர் மாதங்களாக உயர்த்தி வருகிறது. நிதி கொள்கை குழு கூட்டம் மூன்றாம் தேதியை நடந்தது.
இதில் மீண்டும் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வட்டி உயர்வு அறிவிப்பு இடம் பெறாமல் இருந்தது. இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் இருந்து ரெப்போரேட்டை 0.5% முதல் 0.75% வரை உயர்த்த பரிசளிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக 0.5% நிறுத்தப்பட வாய்ப்புகள் உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது. ரெப்போரேட் உயர்வால் வாடிக்கையாளர்கள் பெற்ற வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் ஆகியவற்றுக்கான வட்டியும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Input & Image courtesy: Thanthi News