பாலியல் குற்றத்திற்கு ஆளான பாதிரியார் - மீண்டும் பணியை தொடர எதிர்த்து மக்கள் போராட்டம்!
பாலியல் குற்றத்திற்கு ஆளான பாதிரியார் மீண்டும் பணியில் சேர்வதற்கு பொதுமக்கள் போராட்டம் தெரிவித்துள்ளார்கள்.
By : Bharathi Latha
மேட்டூரில் பாலியல் குற்றத்திற்கு ஆளான பாத்தியாரை மீண்டும் தேவாலயத்தில் பணி செய்ய மக்கள் தற்போது எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் தூய மரி அன்னை ஆலயம் இருந்து வருகின்றது. இந்த ஆலயத்தை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்காளர்கள் இங்கு இருந்து வருகிறார்கள். இதன் காரணமாக இந்த ஆலயத்தில் கடந்த நான்கு வருடங்களாக சகாயராஜ் என்பவர் பாதிரியாராக இருந்திருக்கிறார். ஆனால் கடந்த மாதம் ஆகஸ்ட்டில், தேவாலயத்தில் வந்த பெண்ணிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக இவரை பணியில் இருந்து நீக்கி வீட்டிற்கு அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.
இதன் காரணமாக மீண்டும் அதே பாதிரியாரின் இந்த ஆலயத்தில் பணியமரத்த தொடர்பான ஒரு அறிக்கை வெளியாகி இருக்கிறது. பாதிரியாருக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் மற்றும் அவருடைய பணி நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினரும் என கிறிஸ்தவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார்கள். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்து இன்னும் பிரச்சனைகள் தலையிட்டு தற்போது தீர்த்து வைத்து இருக்கிறார்கள்.
மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்குதாரர்களாக இந்த ஆலயத்தில் இருக்கும் கிறிஸ்தவர்கள் போலீஸ் அதிகாரிகளிடம் தங்களுடைய மனு கொடுத்து இருக்கிறார்கள் மேலும் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட பாதிரியாரை மீண்டும் பணி அமர்த்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவருடைய பணி நிபத்தை ரத்து செய்து நியமனத்தை ரத்து செய்து அவருடைய பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு வைத்தார்கள். போலீசாரின் அணுகுமுறை காரணமாக சமாதானத்தின் பெயரில் இரு தரப்பினரும் அங்கிருந்து சென்று இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News