இந்து மரபில் சடங்குகள் ஏன்? அறிவியல் பார்வை.!
இந்து மரபில் சடங்குகள் ஏன்? அறிவியல் பார்வை.!

" இந்து " இது வெறும் மதம் மட்டுமல்ல ஒரு வாழ்க்கை முறை. மதம் என்பது அந்த மார்க்கத்தின் முழுமையான அடிப்படை உண்மையை நாம் புரிந்து கொள்ள வடிவமைக்கப்பட்ட ஒரு பாதை. இதில் சடங்குகளின் பங்கு அலாதியானது. நாம் பின்பற்றக்கூடிய சடங்குகள் பலவும் கலாச்சாரத்தின் குறியீடாகவே இருக்கின்றன. ஒருவர் காலில் விழுகிற போது அவரின் தலையை தொட்டு ஆசிர்வதிக்கிறார்கள். காரணம் உடலில் இருக்க கூடிய ஏழு சக்கரங்களில் சஹஸ்கரநாமம் என்னும் சக்கரம் இருக்கும் இடத்தில் கையை வைத்து ஆசிர்வதிக்கிற போது ஆற்றல் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிமையாக கடத்த முடியும் என்பதால்.
இதனாலேயே வீட்டில் இருக்கும் பெரியோர்கள் குருமார்களின் கால்களில் விழுவதை நாம் பண்பாடாக கொண்டிருக்கிறோம்.
அதை போலவே சக்கரங்களின் முக்கியத்துவம் பேசும் ஒரு சடங்காகவே நெற்றியில் இடும் திலகமும் இருக்கிறது. விபுதி, குங்குமம், சந்தனம் என எந்தவொரு திலகத்தையும் புருவ மத்தியில் வைக்கிற போது அங்கிருக்கிற சக்கரம் தூண்டப்படும் என்பதாலேயே அந்த சடங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது
மற்றும் ஆரத்தி எடுத்தல் என்பது நம் மரபின் முக்கிய சடங்கு. ஆரத்தியின் மூலம் ஒருவரை சுற்றியிருக்கும் சூழலை குறிப்பாக காற்றை சுத்திகரிக்க முடியும். ஆரத்தி தீபத்தின் நெருப்பு காற்றிலிருக்கும் கிருமிகளை அறிவியல் ரீதியாக அழித்து சுத்திகரிக்கிறது .
அதை போலவே நாம் மேற்கொள்ளும் விரதங்கள். ஆன்மீக ரீதியான முக்கியத்துவ த்தை பெற்றிருந்தாலும் உணவை தவிர்த்து, பழங்கள் மற்றும் திரவ உணவை எடுத்து கொள்வதன் மூலம் நம் ஜீரண மண்டலம் சிறப்பாக செயல்படும் என்பது அறிவியல் உண்மை.
சூரிய வணக்க செலுத்துவது ஒரு வகை சடங்கு, இச்சடங்கை செய்கிற போது அதிகாலையில் முதன் முதலில் இளம் கதிரை பார்ப்பது கண்களுக்கு ஏதுவானது என்பது அறிவியல் உண்மை.
இவ்வாறாக ஒவ்வொரு சடங்குகளும், ஒவ்வொரு பண்டிகையும், ஏன் ஒவ்வொரு கிழமைகளுக்கும் கூட ஒரு சடங்கும் மரபும் உண்டு. இப்படி நம் சடங்குகளும் மரபுகளும் அறிவியல் பூர்வமாக உருவாக்கப்பட்டிருக்கும் சூழலில் ஒரு சிலரின் மூட நம்பிக்கைகளின் உட்புகுத்தலால் அதன் மொத்த அர்த்தமும் திரிந்துவிடும் அவலமும் நிகழ்கிறது.