Kathir News
Begin typing your search above and press return to search.

ஏழாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி சாதனை- குஜராத்தில் பா.ஜனதா அபார வெற்றி

குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜ் ஜனதா அமுக வெற்றி பெற்றது இதன் மூலம் அக்கட்சி ஏழாவது முறையாக ஆட்சி கைப்பற்றி சாதனை படைத்தது. இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

ஏழாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி சாதனை- குஜராத்தில் பா.ஜனதா அபார வெற்றி
X

KarthigaBy : Karthiga

  |  9 Dec 2022 6:00 AM GMT

குஜராத் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளில் பாதிக்கும் மேற்பட்ட வாக்குகளை பா.ஜ.க பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 53 சதவீத வாக்குகள் அந்த கட்சிக்கு கிடைத்தது. காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 28 சதவீத ஓட்டுகள் விழுந்தன. புதிதாக களமிறங்கிய ஆம்ஆத்மிக்கு 13 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரசுக்கு 44% வாக்குகள் கிடைத்தன. பாரதிய ஜனதாவுக்கு 43 சதவீத ஓட்டைகள் கிடைத்துள்ளன. ஆம் ஆத்மிக்கு ஒரு சதவீத ஓட்டுகள் விழுந்தன.


பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமைச்சர் ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத் 1995ஆம் ஆண்டு முதல் பா.ஜ.க.வின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வருகிறது. 1995, 1998, 2002, 2007 , 2012, 2017 என ஆறு முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க இந்த தேர்தலிலும் வெற்றி கனி பறிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த கட்சி சார்பில் பிரதமர் மோடி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து மத்தியிலும் மாநிலத்திலும் இரட்டை என்ஜின்அரசு அமைய மக்கள் பா.ஜ.கவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி ஓட்டு வேட்டையாடினர். பிரதமர் மோடி பிரம்மாண்ட வாகன அணிவகுப்பு பேரணிகளையும் நடத்தி காட்டினார். காங்கிரஸ் கட்சிக்கு அதன் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் முதல் மந்திரிகளான அசோக் கெலாட்டும் பிரச்சாரம் செய்தனர்.


வழக்கமாக பா.ஜ.க.வும் காங்கிரசும் மோதி வந்த இந்த மாநிலத்தில் டெல்லி பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து இங்கும் ஆட்சியை பிடித்துவிடும் கனவில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும் முதல் முறையாக களமிறங்கியது. இதனால் மும்முனைப்போட்டி நிலவியது. கெஜ்ரிவால் தீவிர பிரச்சாரம் செய்தார். குஜராத் சட்டசபை தேர்தலில் 64.33 சதவீத வாக்குகள் பதிவாகின முந்தைய தேர்தலை விட இது 4.08 சதவீதம் குறைவாகும். குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க தொடர்ந்து ஏழாவது முறையாக அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இங்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து மாநிலம் எங்கும் பா.ஜ.க வேட்பாளர்கள் முன்னிலை பெற தொடங்கினர். இந்த முறை குஜராத் தேர்தலில் முந்தைய வெற்றியின் சாதனைகளை எல்லாம் பா.ஜ.க முறியடுத்து காட்டும் எனக் கூறிய உள்துறை மந்திரி அமித்ஷாவின் வார்த்தைகள் அப்படியே பலித்து இருக்கின்றன. இதுவரை காங்கிரஸ் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டிய தொகுதிகளிலும் பா.ஜ.க இந்த முறை வெற்றி பெற்றிருக்கிறது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News