Kathir News
Begin typing your search above and press return to search.

ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவு ஜி.எஸ்.டி வசூல் சாதனை - பிரதமர் மோடி மகிழ்ச்சி

கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவு அதிகபட்ச அளவாக ஒரு லட்சத்து 87 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி வசூல் ஆகியுள்ளது. இது முந்தைய சாதனை வசூலை விட 12 சதவீதம் அதிகமாகும்.

ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவு ஜி.எஸ்.டி வசூல் சாதனை -  பிரதமர் மோடி மகிழ்ச்சி

KarthigaBy : Karthiga

  |  2 May 2023 5:30 AM GMT

பல்வேறு மறைமுக வரிகளை ஒருங்கிணைத்து ஜி.எஸ்.டி வரி கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது இருந்து மாதந்தோறும் கிடைத்துவரும் ஜி. எஸ் . டி வசூல் விவரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் கிடைத்த. ஜி.எஸ்.டி வசூல் விவரத்தை நேற்று வெளியிட்டது. ஏப்ரல் மாதத்தில் ரூபாய் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 35 கோடி ஜி.எஸ்.டி வசூல் ஆகி உள்ளது .


இதில் மத்திய ஜி.எஸ்.டி.யாக ரூபாய் 38,440 கோடியும் , மாநில ஜி.எஸ்.டி.யாக ரூபாய் 47,412 கோடியும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி யாக 89 ஆயிரத்து 158 கோடியும், செஸ் மூலம் ரூபாய் 125 கோடியும் கிடைத்துள்ளது. ஜி.எஸ்.டி அமலுக்கு வந்ததிலிருந்து பெறப்பட்ட மாதாந்திர வசூலில் இதுதான் அதிகபட்ச வசூல் ஆகும். இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கிடைத்த ஒரு லட்சத்து 68 ஆயிரம் கோடி வசூல் தான் அதிகபட்ச வசூலாக இருந்தது . அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது 12 சதவீதம் கூடுதலாக வசூல் ஆகியுள்ளதாக மதி நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மேலும் கடந்து 2022- 2023 நிதி ஆண்டில் கிடைத்த மொத்த ஜி.எஸ்.டி வசூல் 18 லட்சத்து 10 ஆயிரம் கோடி ஆகும். இது அதற்கு முந்தைய நிதியாண்ட வசூலை விட 22 சதவீதம் அதிகம். இதற்கிடையே ஜி.எஸ்.டி வசூல் சாதனைக்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் . அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய செய்தி குறைவான வரி விகிதத்தையும் மீறி அதிக தொகை வசூலாக இருப்பது ஜி.எஸ்.டி எப்படி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News