Kathir News
Begin typing your search above and press return to search.

"மனுஸ்மிருதி, புனித குர்ஆன் நூல்களைப் படித்துப் பார்க்கச் சொல்லுங்கள்" ரெஹானா பாத்திமா வழக்கில் கோபமடைந்த நீதிபதி #Rehana

"மனுஸ்மிருதி, புனித குர்ஆன் நூல்களைப் படித்துப் பார்க்கச் சொல்லுங்கள்" ரெஹானா பாத்திமா வழக்கில் கோபமடைந்த நீதிபதி #Rehana

மனுஸ்மிருதி, புனித குர்ஆன் நூல்களைப் படித்துப் பார்க்கச் சொல்லுங்கள் ரெஹானா பாத்திமா வழக்கில் கோபமடைந்த நீதிபதி #Rehana

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 July 2020 2:48 AM GMT

கடந்த மாதம் ரெஹானா பாத்திமா தன் மைனர் குழந்தைகளை வைத்து தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய வைத்து, 'உடல் மற்றும் அரசியல்' என்ற தலைப்பில் வீடியோவை வெளியிட்டார். முகநூலில் வீடியோவையும், புகைப்படங்களையும பதிவிட்டு, சர்ச்சைக்குரிய வகையில் ஆண், பெண் உடல் குறித்த கருத்துகளையும் ரெஹானா பாத்திமா பதிவிட்டிருந்தார்.

ஏற்கெனவே சபரிமலை நுழைவு சர்ச்சைகளுக்குப் பெயரெடுத்த ரெஹானா பாத்திமா வெளியிட்ட இந்த வீடியோவால் மிகுந்த சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ரெஹானா பாத்திமா கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் தான் செய்த செயலை நியாயப்படுத்தியும், தனது குழந்தைகளுக்குப் பாலியல் கல்வியைக் கற்றுக்கொடுக்கவே தனது உடலில் படம் வரையவைத்து உணர்த்தினேன் என்றும் கூறியிருந்தார். குழந்தைகளுக்குப் பாலியல் கல்வி என்பதும், உடல் மீதான புரிதலும் அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.வி.உன்னிகிருஷ்ணன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அமர்வில் ரெஹானா பாத்திமா தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், "மனுதாரர் தனது குழந்தைகளுக்குப் பாலியல் கல்வியைக் கற்றுக் கொடுக்கத்தான் இவ்வாறு செய்தார்" எனத் தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதி உன்னிகிருஷ்ணன் கோபமடைந்து "மனுதாரர் ரெஹானா பாத்திமாவுக்கு வேண்டுமானால் அவரின் கொள்கையின்படி, சித்தாந்தப்படி அவரின் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க உரிமை இருக்கிறது. ஆனால், அவை அனைத்தும் 4 சுவர்களுக்குள் அவரின் வீட்டுக்குள் இருந்திருக்க வேண்டும். சட்டத்தால் அதைத் தடை செய்ய முயலக்கூடாது. மனுஸ்மிருதி, புனித குர்ஆன் நூல்களைப் படித்துப் பார்க்கச் சொல்லுங்கள். அதில் குழந்தைகளின் வாழ்வில் தாயின் பங்கு என்ன என்பது விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கும்.

தனது குழந்தைகளுக்குப் பாலியல் கல்வி கற்றுக்கொடுக்க வேண்டும் என மனுதாரர் நினைத்துள்ளார். அந்த நோக்கத்துக்காக அவரின் அரை நிர்வாண உடலில் அவரின் குழந்தைகளை வைத்தே ஓவியம் வரையவைத்து, அதை சமூக ஊடங்களில் பதிவேற்றமும் செய்துள்ளார். மனுதாரர் தனது குழந்தைகளுக்குப் பாலியல் கல்வியைச் சொல்லிக்கொடுக்க வேண்டும் எனும் வாதங்களையும், விளக்கத்தையும் கேட்கும் நிலையில் இல்லை'' எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.

சுவாமி ஐயப்பனின் ஆகம விதிகளை மீற முயற்சி செய்த ரெஹானா அந்த பலனை அனுபவிக்கிறார் என சுவாமி ஐயப்பனின் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News