குடியரசு தின விழா - சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் பங்கேற்கிறார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்திய குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்துல் பட்டா அல் - சிசி பங்கேற்கிறார்.
By : Karthiga
1980 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்தியா குடியரசு நாடானது அந்த ஆண்டிலிருந்து டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள், கோலாகலமாக நடந்து வருகின்றன.நட்பு நாடுகளின் தலைவர்கள், சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கம் 1950 ஆம் ஆண்டு குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக இந்தோனேசியாவின் அப்போதைய அதிபர் சுகர்நோ கலந்து கொண்டார். 1952,1953,1966 ஆகிய ஆண்டுகளில் மட்டும் வெளிநாட்டு தலைவர் யாரும் பங்கேற்காமல் குடியரசு தின விழா நடந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் அப்போதைய பிரதமர் போரீஸ் ஜான்சனும், இந்த ஆண்டு ஐந்து மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் அதிகரித்ததால் அவர்களின் வருகை ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்கும் குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்துல் பட்டா அல்- சிசி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இத்தகவலை மத்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடி விடுத்த அழைப்பு கடிதத்தை எகிப்து அதிபரிடம் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் கடந்த மாதம் ஒப்படைத்ததாகவும் அதை எகிப்து அதிபர் ஏற்றுக் கொண்டதாகவும் மதிய இரவு அமைச்சகம் கூறியுள்ளது. இந்திய குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் ஒருவர் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். இந்தியாவும் எகிப்தும் தங்களது தூதரக உறவின் 75வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகின்றன.