போலீசாருக்கும் குடும்பம் இருக்கிறது.. ஊரடங்கை மதியுங்கள்.. அமைதியாய் கொரோனாவை எதிர்ப்போம்..
போலீசாருக்கும் குடும்பம் இருக்கிறது.. ஊரடங்கை மதியுங்கள்.. அமைதியாய் கொரோனாவை எதிர்ப்போம்..

உலகம் முழுவதும் சுமார் 190 நாடுகளை கொரோனா என்ற நச்சு வைரஸ் தாக்கி மனித இனத்தையே ஆட்டி படைக்கிறது.
இதன் தாக்கம் இந்தியாவிலும் தொடர்கிறது. இத்தாலி, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறக்க நேரிட்டது.
உலகம் முழுவதும் இறப்பு விகிதம் சுமார் 30 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
இதனை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்தார்.
இந்த உத்தரவை குறிப்பிட்ட மாநிலங்கள் மிகவும் கடுமையாக கடை பிடித்து வருகிறது.
ஒரு சில மாநிலங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே சென்று வருவதை பார்க்க முடிகிறது.
அதிலும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பொதுமக்கள் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியே சென்று வருகின்றனர்.
இவர்களை போலீசார் வீட்டில் இருங்கள் என்று தினமும் அறிவுரை கூறி வருகின்றனர். ஆனாலும் மதிக்காமல் இளைஞர்கள், பொதுமக்கள் சுற்றிதிரிகின்றனர்.
அவ்வாறு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே சென்றால் மனிதர்கள் மூலம் எளிதில் பரவ வாய்ப்புள்ளது.
எனவே வெளியே செல்லாமல் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் சிலர் மதிக்காமல் தினமும் வெளியே வருகின்றனர். அது போன்று வருபவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.
அப்படி எச்சரித்து அனுப்பும் போலீசாருக்கும் குடும்பம் உள்ளதை எண்ணி பார்க்க வேண்டும்.
பொதுமக்கள் நோய் பரவாமல் பார்த்து கொள்வதில் போலீசாருக்கும் முக்கிய கடமை உள்ளது.
தங்களின் குடும்பம், தனக்கு நோய் பரவும் என்ற பயம் இல்லாமல் இரவு, பகலாக காவல் காத்து வருகின்றனர்.
அவர்களின் செயலுக்கு பொதுமக்கள் மதிப்பளியுங்கள். இனிமேல் இருக்கின்ற நாட்களில் ஆவது வீட்டில் இருங்கள்.
இந்தியாவை விட்டு கொரோனாவை விரட்டுவோம் என்று ஒவ்வொரு இந்திய குடிமகன்கள் உறுதி மொழி எடுத்தால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.