நவம்பர் 1 முதல் ஆஸ்திரேலியர்கள் வெளிநாடு செல்ல அனுமதி !
ஆஸ்திரேலியாவில் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மனித உயிர் பாதுகாப்பு நிர்ணய சட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தால் ஆஸ்திரேலியர்கள் வெளிநாடு செல்வதை முழுமையாக கட்டுப்படுத்தியது.
By : Thangavelu

தற்போது உலகளவில் கொரோனா பெருந்தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இந்த சட்டத்தில் மாறறம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் நவம்பர் 1ம் தேதி முதல் தாராளமாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் கிரேக் ஹண்ட் கூறும்போது, ஆஸ்திரேலிய குடிமக்களும், நிரந்தர குடியுரிமை பெற்றவர்களும் வெளிநாடு செல்ல விரும்பினால் இரண்டு தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை அளிக்க வேண்டும். பயணம் செய்வதற்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி இரண்டாவது தடுப்பூசி டோஸ் போட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Source: Daily Thanthi
Image Courtesy: Bloomberg.com