சென்னை விமான நிலையம் பற்றிய விமர்சனம்! தானாக வந்து சிக்கிய கனிமொழி!! காய்த்தெடுத்த நெட்டிசன்கள்!!
சென்னை விமான நிலையம் பற்றிய விமர்சனம்! தானாக வந்து சிக்கிய கனிமொழி!! காய்த்தெடுத்த நெட்டிசன்கள்!!
By : Kathir Webdesk
சென்னை விமான நிலைய புதிய முனையம், திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியின்போது 2013-ஆம் ஆண்டு, ரூ.2 ஆயிரம் கோடி நிதியில் விவாக்கம் செய்யப்பட்டது.
ஆனால் முறையாக கட்டுமான பணிகள் செய்யாததால், 70-க்கும் மேற்பட்ட முறை கண்ணாடிகள் மற்றும் மேற்கூரைகள் விழுந்து உள்ளன. பெருமளவில் கமிஷன் வழங்கப்பட்டதுதான் தரமற்ற கட்டுமாத்திற்கு காரணம் என்ற குற்றச்சாட்டை மறுக்க முடியாது.
அதேபோல ஒப்பந்ததார், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி குடும்பத்திற்கு நெருக்கமானவர்.
இந்த நிலையில் சென்னை விமானநிலையத்தில் மேற்கூரையில் இருந்து மழைநீர் விமான நிலையத்தினுள் வடிந்தது. அதனை அகற்ற பிளாஸ்டிக் பக்கெட்டுகள் வைக்கப்பட்டதை பார்த்த கனிமொழி அதற்கு காரணம் தாங்கள்தான் என்பதுகூடத் தெரியாமல் விமர்ச்சித்து வம்பில் மாட்டிக்கொண்டார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பதிவில், “முதலில் மேற்கூரை விழுந்தது. இப்போது மழை நீர் கொட்டுகிறது. அதை பிடிக்க பிளாஸ்டிக் பக்கெட்டுகள் வைக்கப்பட்டுள்ளன” என்று கனிமொழி குறிப்பிட்டுள்ளார.
இந்த பதிவை தமிழுக்காக உயிரை கொடுக்கும் திமுகவைச் சேர்ந்த கனிமொழி, ஆங்கில மொழியில் வெளியிட்டு உள்ளார்.
இது நெட்டிசன்களை கொதிப்படைய செய்தது. கனிமொழியை அவர்கள் காய்த்து எடுத்து வருகின்றனர்.
பதிவை தமிழிலில் பதிவிடாதது குறித்து குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ள ராகவ், “தமிழிலிலும் பதிவிடலாமே பாரளமன்ற உறுப்பினர் அவர்களே ஆக” என்று கேலி செய்துள்ளார்.
“கடந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது கட்டப்பட்ட சென்னை விமான நிலைய புதிய முனையத்தின் கட்டுமான குறைபாடு காரணமாக கனிமொழி அதிருப்தி...
இந்த டுவிட் போடுறதுக்கு முன்னாடி கண்ணாடியை பார்த்திருக்கலாம்” என்று கனிமொழியை வறுத்தெடுத்துள்ளார் ஜோசப் ஆன்டோ என்பவர்.
ஆனந்த் என்பவர், “38 சிங்கம் atleast இந்த அசிங்கத்தையாவது சரி செய்யலாமே. உங்கள் முந்தய ஆட்சியின் இலட்சணம் தானே இது. பொறுப்புள்ள நாடுளுமன்ற உறுப்பினராக நீங்களே கூட suo moto action எடுக்கலாம்
முதுகு வளைந்து உழைத்திருந்தாலோ, நாட்டின் மீது பற்று இருந்தாலோ தன்னாலே வரும். நமக்குதான் தெரியாதே” என்று கனிமொழியை வெச்சி செஞ்சி உள்ளார்.
இன்னும் ஏராளமான வாசகர்களின் வீச்சுகளை, கனிமொழியின் டுவிட்டர் பக்கத்தின் கமெண்ட் பகுதிக்கு சென்று படித்து பயன் பெறவும் .