தகவல் அறியும் உரிமை சட்டமும் நீதித்துறையின் வெளிப்படை தன்மையும்!
தகவல் அறியும் உரிமை சட்டமும் நீதித்துறையின் வெளிப்படை தன்மையும்!
By : Kathir Webdesk
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எல்ல அரசு துறைகளும்
வருவதில்லை சில துறைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது
சமீபத்திய உச்ச நீதிமன்றத்தின் பார்வையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை
நீதிபதி தகவல் அறிய உரிமை சட்டத்தில் கீழ் வருவதாக கருத்து
தெரிவிக்கிறது.
சில மாதங்களுக்கு முன் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர்
கொண்ட நீதிபதிகள் குழு 2010 ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் இந்த தகவல்
அறியும் உரிமை சட்டம் சார்பாக வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. இது ஒரு
பெரிய வெற்றி போல் பார்க்கப்பட்டாலும் இதை தாண்டிய பல விஷயங்கள்
நீதித்துறையின் வெளிப்படை தன்மையை பாதிக்கவே செய்கிறது. இன்றும்
கூடு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொத்து மதிப்பை வெளியிட வேண்டிய
அவசியம் இல்லை என்ற நிலையே இருக்கிறது.
இன்றைய சூழலில் சமூகத்தில் வரும் சட்ட பிரச்சனைகள் மாவட்ட கீழ்மை
நீதிமன்றத்தலையே முதலாவதாகமுதன்மையாக கையாளப்படுகிறது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தை பொறுத்த வரையில் அதை
நடைமுறைப்படுத்துவதற்கான வசதிகளையும் செயல்படுத்துவதற்கான
வழிமுறைகளையும் கையாள வேண்டும் இதை நெறி முறை படுத்தும்
கடமை மாவட்ட நீதிமன்றங்களுக்கே உள்ளது.
ஆனால் பெரும்பான்மையான உயர் நீதி மன்றங்கள் இதை செய்வதில் மெத்தனம்
காட்டுகின்றன. ஒரு அறிக்கையின் படி குஜராத் கர்நாடக மத்தியபிரதேசம்
மற்றும் பாட்னா உயர் நீதி மன்றங்கள் கீழ்மை நீதிமன்றங்களில் தகவல்
அறியும் உரிமை சட்டத்தை நடைமுறை படுத்துவதில் மெத்தனம்
காட்டியிருக்கிறது.
இந்தியாவில் 13 மாநில யுவர் நீதி மன்றங்கள் கீழ்மை நீதிமன்றத்தின்
மூலம் தகவல் அறியும் உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த
தேவைப்படும் கட்டணத்தை எந்த அதிகாரியிடம் கட்ட வேண்டும் என்கிற
தெளிவை கூட ஏற்படுத்த வில்லை ஆய்வுகள் தெரிவிக்கிறது.
இன்னும் பொது மக்களுக்கு இது பற்றிய சரியான வழிமுறைகளோ இது
சம்பந்தமாக சந்திக்க வேண்டிய நபர்களை பற்றியோ தெளிவாக
தெரிவதில்லை.
மேலும் தகவல் அறியும் உரிமை சட்டமானது நீதிமன்றங்கள் தங்களது வரவு
செலவு கணக்கையும் நிர்வாக தகவல்களையும் தங்களது இணைய தளத்தில்
வெளியிட வேண்டும் என்று கூறியிருக்கிறது. இந்தியா பெரும்பாலான
நீதிமன்றங்கள் நடைமுறைப்படுத்துவதில்லை. கேரளா பஞ்சாப் ஹரியானா
மாநிலங்கள் இதை சரியாக செய்கின்றன. அசாம் மத்திய பிரதேசம் மேற்கு
வங்கம் போன்ற மாநிலங்கள் இதை செய்வதில்லை.