கிரிப்டோகரன்சியின் எழுச்சி மற்றும் சைபர் குற்றங்களால் புதிய சவால்- பிரதமர் மோடி!
கிரிப்டோ கரன்சியின் எழுச்சி மற்றும் சைபர் குற்றங்கள் புதிய சவால்களை அளிக்கின்றன என பிரதமர் மோடி கூறினார்.
By : Karthiga
காமன்வெல்த் சட்டக் கல்வி அமைப்பு காமன்வெல்த் அட்டார்னி மற்றும் தொழில் மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
சுதந்திரமான சுயாட்சியின் அடி நாதமாக நீதி இருக்கிறது. நீதி இல்லாமல் தேசத்தின் இருப்பு சாத்தியமில்லை. குற்றவாளிகள் தங்களுக்கான நிதி வசூலுக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். அத்துடன் பிராந்தியம் முழுவதும் தங்கள் சமூக விரோத செயல்பாடுகளை பரவலாக்கி வருகின்றனர். எனவே குற்ற விசாரணை மற்றும் நீதி வழங்களலுக்கு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை விரிவு படுத்த வேண்டும்.
சில சமயங்களில் ஒரு நாட்டில் நீதியை உறுதிப்படுத்த மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். விமான போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் கடல்வழிப் போக்குவரத்தின் களத்தில் ஏற்கனவே நாடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுகின்றன. இதை விசாரணை மற்றும் நீதி வழங்கல் வரை வரை நீட்டிக்க வேண்டும். ஒருவர் மற்றவரின் அதிகார வரம்பிற்கு மதிப்பளிக்கும் போது கூட ஒத்துழைப்பு நிகழலாம். நாம் இணைந்து பணியாற்றும் போது நீதியை வழங்குவதற்கான ஒரு கருவியாக அதிகார வரம்பு மாறும் .அதை தாமதப்படுத்தாது கிரிப்டோ கரன்சியின் எழுச்சி மற்றும் சைபர் குற்றங்கள் புதிய சவால்களை அளிக்கின்றன.
ஒரு பிராந்தியத்தின் பொருளாதார குற்றங்கள் மற்ற பிராந்தியங்களில் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க பயன்படுத்தப்படுகின்றன. 21 ஆம் நூற்றாண்டு சவால்களை இருபதாம் நூற்றாண்டு அணுகுமுறையை கொண்டு எதிர்பார்க்க முடியாது. எனவே மறுபரிசீலனை மற்றும் சீர்திருத்தம் தேவை .நீதியை வழங்கும் சட்ட அமைப்புகளை நவீனமயமாக்க வேண்டிய தேவை உள்ளது. நீதி வழங்கும் அமைப்பை மேலும் நிகழ்வு தன்மையை மற்றும் ஏற்புடையதாக மாற்ற வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
SOURCE :DAILY THANTHI