Kathir News
Begin typing your search above and press return to search.

செல்வத்தை தரும் வெள்ளிக்கிழமை விளக்கு வழிபாடு. - விளக்கு வழிபாடு செய்வதெப்படி.?

செல்வத்தை தரும் வெள்ளிக்கிழமை விளக்கு வழிபாடு. - விளக்கு வழிபாடு செய்வதெப்படி.?

செல்வத்தை தரும் வெள்ளிக்கிழமை விளக்கு வழிபாடு. - விளக்கு வழிபாடு செய்வதெப்படி.?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Sept 2020 7:52 AM IST

வெள்ளிக்கிழமை, கார்த்திகை, திருவாதிரை, பூசம், விசாகம், பௌர்ணமி அமாவாசை, திருவோணம், சதுர்த்தி, பஞ்சமி, ஏகதேச மற்றும் நவராத்திரி சிவராத்திரி , செவ்வாய், தை வெள்ளி ஆகிய நாட்கள் திருவிளக்கு பூஜைக்கு எற்ற நாட்கள் ஆகும்.

வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கூட்டு பிராத்தனையாக பெண்கள் கூட்டாக விளக்கு பூஜை செய்வது மிகுந்த நன்மையை தரும். ஏற்றப்படும் விளக்குகளில் வெள்ளி விளக்கு மிகச்சிறப்புடையது அதற்கடுத்து வெண்கல விளக்கு அதற்கடுத்து பித்தளை விளக்கு, அவரவர் வசதியின் படியும் விருப்பத்தின் படியும் விளக்குகளை வாங்கி கொள்ளலாம் ஆனால் எவர்சில்வர் விளக்குகளை பூஜையில் பயன்படுத்த கூடாது. விளக்குகளில் ஏற்றப்படும் திரி பருத்தி பஞ்சினால் ஆனதாக இருந்தால் நன்மைகளும் வழங்கும், இலவம்பஞ்சு திரி சகல பாக்கியங்களையும் தரும் தாமரை தண்டு திரி முன்வினை பாவத்தை போக்கும் செல்வம் நிலைத்து நிற்கும்.

தீபம் ஏற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரமாகும். இந்த நேரத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் புண்ணியங்களும் நன்மைகளும் வரும், நம் பாவங்கள் விலகும். மாலை 4 30 மணிக்கும் 6 மணிக்கும் இடையே உள்ள நேரம் அதாவது பிரதோஷ நேரம் சிவபெருமானுக்கும் நரசிம்மருக்கு உகந்த நேரமாகும். இவ்வேளையில் தீபம் ஏற்றினால் திருமணத்தடை கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் வீட்டில் லஷ்மி வாசம் செய்வாள். மாலையில் விளக்கேற்றும் போது தண்ணீர் விட்டு சுத்தம் செய்த பின்பே விளக்கேற்ற வேண்டும். காலை மாலை விளக்கேற்றும் போது வீட்டின் பின் பக்க கதவை சாத்தி விட வேண்டும். சில வீடுகளில் பின் பக்க கதவு இல்லாமல் இருக்கலாம் இது போன்று இருப்பவர்கள் வீட்டின் ஜன்னல்களை சாதி விட்டு விளக்கிற்கு பால் கல்கண்டு நிவேதனம் செய்து வழிபட வேண்டும். தீபம் ஏற்றும் போது சுவாமி அரை மட்டுமல்லாது வீட்டின் நடு முற்றம் சமையலறை துளசி மாடம் போன்ற இடங்களிலும் தீபம் ஏற்றலாம்

மாலை நேரத்தில் வீட்டின் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் எப்பேர்ப்பட்ட வறுமையின் ஆழத்தில் இருந்தாலும் நிச்சயமாக செல்வ செழிப்பான உச்சத்திற்கு வரும் என்பது ஐதீகம்.

Image Credits : Seithipunal

Next Story
கதிர் தொகுப்பு
Trending News