Kathir News
Begin typing your search above and press return to search.

சாலையின் நடுவில் 8 மின்கம்பங்களை வைத்து சாலை விரிவாக்க அமைப்பு - கும்பகோணத்தில் ஒப்பந்தக்காரர் அட்ராசிட்டி

தஞ்சாவூர் அருகே சாலையின் நடுவில் 8 மின்கம்பங்களை வைத்து சாலை விரிவாக்க அமைப்பு !

சாலையின் நடுவில் 8 மின்கம்பங்களை வைத்து சாலை  விரிவாக்க அமைப்பு - கும்பகோணத்தில் ஒப்பந்தக்காரர் அட்ராசிட்டி

KarthigaBy : Karthiga

  |  18 Aug 2022 11:15 AM GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சாலை விரிவாக்க பணியின் போது சாலையின் நடுவில் 8 மின்கம்பங்களை வைத்து சாலை அமைக்கப்பட்டுள்ளது.

தென்னூர் பகுதியில் வளைவாக இருந்த சாலையை நேராக அமைக்கும் வகையில் சாலை விரிவாக்க பணி நடைபெற்றது.


அப்போது சாலையின் குறுக்கே அமைந்த மின்கம்பத்தை அகற்றி சாலையோரம் அமைக்கும் முன்னரே அந்த மின்கம்பத்தை சாலையின் நடுவில் வைத்து சாலை விரிவாக்கப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இரவு நேரங்களில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோர் சாலை அகலமாக இருப்பதாக கருதி சென்றால் விபத்து நிகழும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


Source -polimer news

Next Story
கதிர் தொகுப்பு
Trending News