Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லி அரசு பள்ளி வகுப்பறைகள் கட்டியதில் ரூபாய் 1300 கோடி ஊழல் - விசாரணைக்கு லஞ்ச ஒழிப்பு இயக்குனரகம் சிபாரிசு!

டெல்லி அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டியதில் நடந்ததாக கூறப்படும் 1300 கோடி ஊழல் குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு இயக்குனரகம் சிபாரிசு செய்துள்ளது.

டெல்லி அரசு பள்ளி வகுப்பறைகள் கட்டியதில் ரூபாய் 1300 கோடி ஊழல் - விசாரணைக்கு லஞ்ச ஒழிப்பு இயக்குனரகம் சிபாரிசு!

KarthigaBy : Karthiga

  |  26 Nov 2022 10:15 AM GMT

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது. அங்கு பொதுப்பணி துறை மூலம் அரசுப் பள்ளிகளில் 2400 வகுப்பறைகள் கட்டப்பட்டன . அந்த வகுப்பறைகள் கட்டியதில் அப்பட்டமாக முறைகேடுகள் நடந்ததாக மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி தனது அறிக்கையில் தெரிவித்தது. மேலும் அதே மாதம் அந்த அறிக்கையை டெல்லி அரசு லஞ்ச ஒழிப்பு இயக்குனரகத்துக்கு அனுப்பி வைத்தது. அதன் கருத்துகளை கேட்டது. ஆனால் லஞ்ச ஒழிப்பு இயக்குனரகம் இரண்டரை ஆண்டுகளாக எந்த பரிசீலனையும் செய்யவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் கவர்னர் வி. கே சக்சேனா இந்த தாமதத்துக்கான காரணத்தை ஆய்வு செய்து அறீக்கை தாக்கல் செய்யுமாறு தலைமை செயலாளரை கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு இயக்குனரகம் இதில் 1300 கோடி ஊழல் நடந்துள்ளதாக கூறியதுடன் ஊழல் குறித்து சிறப்பு அமைப்பை கொண்டு விசாரணை நடத்துமாறு சிபாரிசு செய்துள்ளது. ஊழலுக்கு காரணமான மாநில கல்வித்துறை, பொதுப்பணித்துறை ஆகியவற்றின் அதிகாரிகள் மீது பொறுப்பு நிர்ணயிக்குமாறு கூறியுள்ளது. இந்த அறிக்கை தலைமைச் செயலாளரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இப்பிரச்சினை குறித்து பா.ஜனதா செய்தி தொடர்பாளர் கௌரவ் பட்டியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-

அரவிந்த் கெஜ்ரிவால் அரசு டெண்டர் விடாமல் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு வகுப்பறைகள் கட்டும் பணியை அளித்தது. இது மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விதிமுறைகளை மீறிய செயல். அந்த நிறுவனம் பள்ளிகளில் கழிப்பறைகளை கட்டியது. அவற்றையும் வகுப்பறைகள் கணக்கில் சேர்த்து விட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு வரவேண்டிய கருப்பு பணம் பற்றி தான் கவலைப்படுகிறாரே தவிர குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படவில்லை. லஞ்ச ஒழிப்பு இயக்குனரகம் டெல்லி அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதுவே ஊழல் நடந்திருப்பதை சொல்லிவிட்டது. ஊழல் மந்திரியை நீக்க தயாரா? இவ்வாறு அவர் கூறினார்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News