Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ் முதல்வரின் மருமகன் ரூ.1,400 கோடிக்கு வங்கி மோசடி! தோண்ட தோண்ட புதுப்புது மோசடிகள்!!

காங்கிரஸ் முதல்வரின் மருமகன் ரூ.1,400 கோடிக்கு வங்கி மோசடி! தோண்ட தோண்ட புதுப்புது மோசடிகள்!!

காங்கிரஸ் முதல்வரின் மருமகன் ரூ.1,400 கோடிக்கு வங்கி மோசடி! தோண்ட தோண்ட புதுப்புது மோசடிகள்!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Aug 2019 12:22 PM GMT



காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்தியப்பிரதேச மாநில முதல்வருமான கமல்நாத்தின் மருமகன் ரதுல் பூரி. இவர், மோசர் பேர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர்.


கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து மோசர் பேயர் நிறுவனத்தின் இயக்குநர்கள் 4 பேரும் பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். போலியான ஆவணங்கள் மூலம் ரூ.354 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் கணக்குகளை ஆய்வு செய்தபோது மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.


அது தொடர்பாக கடந்த 20-ஆம் தேதி ரதுல் பூரியை சிபிஐ கைது செய்தது. அமலாக்கப்பிரிவும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. கடந்த திங்கள்கிழமை முதல் அமலாக்கப் பிரிவு ரதுல் பூரியை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.


இந்நிலையில், அமலாக்கப்பிரிவினர் ரதுல் பூரியை காவலில் எடுத்து விசாரித்தபோது, ரூ.1400 கோடிக்கு ரதுல் பூரி மோசடி செய்துள்ளதை கண்டுபிடித்தனர்.





ரதுல் பூரி நடத்தி வந்த மோசர் பேர் நிறுவனம் ஜெர்மனியில் உள்ள சிங்குலஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்திடம் இருந்து ப்ளூரே டிஸ்குகளை விலைக்கு வாங்கி வந்தது. ஏறக்குறைய 33 லட்சம் டாலர்களுக்கு இந்த டிஸ்குகளை வாங்கியது. ஆனால், விலை நிர்ணயிக்கப்பட்டதற்கும், வாங்கப்படதற்கும் ஏராளமான வேறுபாடுகள் இருந்துள்ளன. நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் இருமடங்கு விலை தரப்பட்டுள்ளது.


விசாரணையில் டிஸ்க்கின் விலையை இருமடங்கு வைத்து கொள்முதல் செய்து, அதில் கிடைத்த பணத்தை தனியாக வங்கிக் கணக்கு தொடங்கி அதில் ரதுல் பூரி டெபாசிட் செய்துள்ளார். இதேபோன்று சக்ஸேனா என்பவரிடம் இருந்து சோலார் பவர் பேனல்களையும் வாங்கி ரதுல் பூரி விற்பனை செய்துள்ளார். இதற்காகவும் வங்கியில் கடன் பெற்றுள்ளார்.


இதில் கிடைத்த லாபத்தையும் தனது வங்கிக் கணக்கிற்கு ரதுல் பூரி மாற்றிக்கொண்டு, தொழில் நஷ்டம் ஏற்பட்டதாக கணக்குக் காட்டியுள்ளார். இந்த வகையில் மட்டும் ரூ.1,492.36 கோடிக்கு ஒட்டுமொத்தமாக ரதுல் பூரி வியாபாரம் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் ரதுல் பூரியுடன் சேர்ந்து 25 பேருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


அமலாக்க துறை அதிகாரிகள் இந்த தகவல்களை தெரிவித்தனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News