கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் அபராதம் !
கொரோனா தடுப்பூசி போடாத ஊழியர்களின் ஊதியத்தில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் அபராதமாக பிடித்தம் செய்யப்படும் என்று அமெரிக்காவை சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
By : Thangavelu
கொரோனா தடுப்பூசி போடாத ஊழியர்களின் ஊதியத்தில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் அபராதமாக பிடித்தம் செய்யப்படும் என்று அமெரிக்காவை சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்கு உலகத்தில் உள்ள பல ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பூசிகளை கண்டுப்பிடித்துள்ளனர். இதனிடையே கொரோனா தொற்று பரவலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதனிடையே சில நிறுவனங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத தங்களின் ஊழியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களின் மாத சம்பளத்தில் 15 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. அதாவது ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை செய்து வருவதற்கு குறைந்தபட்சம் ரூ.37 லட்சம் செலவாகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஊழியர்களின் நலன் முக்கியம் என்பதால் இது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar
https://www.dinamalar.com/news_detail.asp?id=2831594