விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கப்படும் திட்டம்.. ஆராய்ச்சி அறிக்கை கூறியது என்ன?
பிரதமர் கிசான் உரிய தருணத்தில் நிதியுதவி அளிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மை.
By : Bharathi Latha
மத்திய அரசு குறிப்பாக விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது. அதில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட பிரதான் கிஷான் யோஜனா என்ற ஒரு திட்டம் தான். தற்போது பல்வேறு தரப்பான விவசாயிகளுக்கு வலுவான நிதி உதவிகளை செய்து வருகிறது. ஒவ்வொரு மாத தவணைகளையும் போதும் விவசாயிகள் இந்த நிதி மூலமாக பல்வேறு நன்மைகளை பெற்று வருகிறார்கள்.
பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டம் என்பது நூறு சதவீதம் அளவிற்கு நிதியுதவி அளிக்கும் மத்திய அரசின் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மூன்று தவணையாக வழங்கப்படுவது அவர்களுக்கு சமூகப் பொருளாதார பாதுகாப்பை அளிக்கிறது.
இதுவரை 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 2.42 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொவிட் பெருந்தொற்றின் போது அமலில் இருந்த ஊரடங்கு காலத்தில் இருந்து ரூ.1.86 லட்சம் கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 3 கோடிக்கும் மேற்பட்ட மகளிர் பயனாளிகள் ரூ.57,628 கோடி பெற்றுள்ளனர். பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டத்தின் மூலம் ஏராளமான விவசாயிகள் மற்றும் வேளாண் துறையினர் பயனடைந்துள்ளதாகவும் மேலும் இந்த திட்டம் விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கப் படுவதாகவும் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி கழகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
Input & Image courtesy: News