ஆன்லைன் ஆப் மூலம் ரூபாய் 4000 கோடி முறைகேடு - தட்டி தூக்கிய அமலாக்கத்துறை!
வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் ஆப் மூலம் ரூபாய் 4000 கோடி முறைகேடு நடந்துள்ளதால் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டில் ஈடுபட்டுள்ளது.
By : Karthiga
வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் கேமிங் இணையதளங்கள் மூலம் ரூபாய் 4000 கோடி சட்ட விரோதமாக வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா , மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள பல்வேறு ஆன்லைன் கேம்மிங் ஆப் தொடர்பான அலுவலகங்கள் உள்ளிட்ட 25 இடங்களில் அமலாக்கத்துறை கடந்த மூன்று நாட்களாக சோதனை நடத்தியது . இந்த ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் மற்றும் இணையதளங்கள் குராக்கோ, மால்டா , சைப்ரஸ் போன்ற சிறிய தீவு நாடுகளில் பதிவு செய்யப்பட்டு இருந்தன. ஆனால் நிறுவனங்களின் வங்கி கணக்குகள் போலிப் பெயரில் இந்தியாவில் திறக்கப்பட்டிருந்தன.
இதன் மூலம் இறக்குமதி செய்வதற்கான கட்டணங்கள் என்ற போர்வையில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் பெயரில் சுமார் ₹4000 கோடி வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து சட்ட விரோத பண பரிமாற்றம், பெமா விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 55 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.